பொது செய்தி

தமிழ்நாடு

அணைக்கு நிலம் கொடுத்த நபர்களுக்கு வீட்டுமனை

Added : ஆக 04, 2021
Share
Advertisement
வேடசந்துார் : அழகாபுரி குடகனாறு அணை உருவாக, நிலம்,வீட்டை காலி செய்த மக்களுக்கு, விரைவில் வீட்டு மனை பட்டா வழங்கப்பட உள்ளது.வேடசந்துார் குடகனாற்றின் குறுக்கே அழகாபுரி அருகே 1971 - 73 ஆண்டுகளில், கைத்தியன்கோட்டை கிராம ஆற்றோர பகுதியை மையமாக வைத்து, அணை உருவாக்கப்பட்டது. இதனால் கைத்தியன்கோட்டை, அனியாயபுரம் பகுதி நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. அவர்கள்

வேடசந்துார் : அழகாபுரி குடகனாறு அணை உருவாக, நிலம்,வீட்டை காலி செய்த மக்களுக்கு, விரைவில் வீட்டு மனை பட்டா வழங்கப்பட உள்ளது.

வேடசந்துார் குடகனாற்றின் குறுக்கே அழகாபுரி அருகே 1971 - 73 ஆண்டுகளில், கைத்தியன்கோட்டை கிராம ஆற்றோர பகுதியை மையமாக வைத்து, அணை உருவாக்கப்பட்டது. இதனால் கைத்தியன்கோட்டை, அனியாயபுரம் பகுதி நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. அவர்கள் வெவ்வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்தனர்.

ஆனால், பாலப்பட்டி கிராமத்தினர் பலருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு, அவர்களுக்கு வீட்டு மனைபட்டா வழங்க நிலநிர்வாக ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி 76பேருக்கு வீட்டுமனை பட்டா தயார் செய்து விரைவில் வழங்கப்பட உள்ளது.

சமூக ஆர்வலர் பொம்முசாமி கூறியதாவது:அணைக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு அந்நாளில் ஏக்கருக்கு ரூ.950 தந்தனர்.தற்போது 76 பேருக்கு வீட்டுமனை பட்டாவிரைவில் வழங்க உள்ளது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X