பழநி : பழநியில் இந்தாண்டு கொரோனா கட்டுப்பாடுகளால் ஆடிப்பெருக்கு திருவிழா களையிழந்து காணப்பட்டது.
பழநி மலைக்கோயில் மற்றும் அதன் உப கோயில்களில் ஆடிப்பெருக்கு நாளான நேற்று பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் வெளியூர் பக்தர்கள் மட்டுமின்றி, உள்ளூர் பக்தர்களும் தரிசனத்திற்காக வரவில்லை. சண்முக நதிக்கரையில் வழிபடச் சென்றவர்களை போலீசார் அனுமதி மறுத்து திருப்பி அனுப்பினர். இதனால் இந்தாண்டு ஆடிப்பெருக்கு பழநியில் களையிழந்து காணப்பட்டது.
விஸ்வ ஹிந்து பரிஷத் கண்டனம் ஆடிப்பெருக்கு நாளில் ஆற்றங்கரையில் முளைப்பாரி இட்டு வழிபடுவதும், குலதெய்வ கோயில்களுக்குச் செல்வதும் வழக்கம். இந்த ஆண்டு பக்தர்களை அனுமதிக்காததால் வேதனை அடைந்தனர். மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் செயலாளர் செந்தில் கூறியதாவது: ஆடிப்பெருக்கு நாளில், நதிகளை பெண்ணாக கருதுகிற ஹிந்துக்கள், புனித நதிகளில் பூஜைகள் செய்வர்.
பழநி சண்முகநதியில் பூஜைகள் நடத்த முன்னறிவிப்பின்றி போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். பக்தர்களுக்கு அனுமதி மறுத்த போலீசை கண்டிக்கிறோம், என்றார்.ஒட்டன்சத்திரம்: இந்தாண்டு இங்கும் ஆடிப்பெருக்கு களையிழந்தது. இங்கு விருப்பாச்சி தலையூத்து பகுதியில் புதுமணத்தம்பதிகள் நீராடி, புத்தாடை அணிந்து, கோவில்களில் சுவாமி கும்பிட்டுச் செல்வது வழக்கம். தொற்று காரணமாக ஆடிப்பெருக்கு கொண்டாட்டத்திற்கு தடை உள்ளதால் இப்பகுதி நேற்று வெறிச்சோடியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE