பழநியில் கடைகளுக்கு சென்று வரும் பப்பி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பழநியில் கடைகளுக்கு சென்று வரும் 'பப்பி'

Added : ஆக 04, 2021
Share
பழநி : பழநியில் செல்லப் பிராணியான நாய் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கி வருவதை பலரும் வேடிக்கை பார்க்கின்றனர்.பழநி சண்முகபுரத்தில் வசிப்பவர் தாஸ் பெர்னாண்டஸ். ஜாக்ஸ்பாரோ என்ற பெயரில் நாயை செல்லமாக வளர்த்து வருகிறார். தனக்கு உதவியாக இந்த நாயை கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கி வரும் அளவுக்கு பழக்கி உள்ளார். உழவர் சந்தை, கோழி இறைச்சிக் கடைகளுக்கு வாயில் கூடையை
 பழநியில் கடைகளுக்கு சென்று வரும் 'பப்பி'

பழநி : பழநியில் செல்லப் பிராணியான நாய் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கி வருவதை பலரும் வேடிக்கை பார்க்கின்றனர்

.பழநி சண்முகபுரத்தில் வசிப்பவர் தாஸ் பெர்னாண்டஸ். ஜாக்ஸ்பாரோ என்ற பெயரில் நாயை செல்லமாக வளர்த்து வருகிறார். தனக்கு உதவியாக இந்த நாயை கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கி வரும் அளவுக்கு பழக்கி உள்ளார். உழவர் சந்தை, கோழி இறைச்சிக் கடைகளுக்கு வாயில் கூடையை கவ்விக் கொண்டு செல்கிறது.கடைக்காரர் கொடுத்தனுப்பும் பொருட்களை வாங்கி வருகிறது. கடைக்காரர்களும் நாயை கண்டவுடன் விரட்டாமல் பொருட்களை கொடுத்து அனுப்புகின்றனர்.

இதன் உரிமையாளர் கூறுகையில், "பத்து மாத குட்டியாக வந்த ஜாக்ஸ்பாரேவின் வயது 4. எங்கள் வீட்டில் ஒருவராக உள்ளது. சமீப நாட்களாக வழக்கமாக நாங்கள் செல்லும் கடைகளுக்கு கூடையை கொடுத்து அனுப்பினால், பொருட்களை சேதாரமின்றி வாங்கி வரும். அதன் பாதுகாப்புக்காக நான் பின்னால் செல்வேன்" என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X