ஆடிப்பெருக்கில் தேங்காய் சுடுதல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆடிப்பெருக்கில் தேங்காய் சுடுதல்

Added : ஆக 04, 2021
Share
பழநி : பழநியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு கிராமப் பகுதிகளில் தேங்காய் சுடுதல் நடைபெற்றது.மகாபாரதப் போரின்போது 18 நாட்களுக்கு பின் முடிவுக்கு வந்த தர்மத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் தேங்காய் சுட்டு வழிபடுவதாக ஐதீகம். இதில் பாசிப்பருப்பு, வெல்லம், கரும்பு சர்க்கரை, எள், அவலை கலந்து, அதனை தேங்காய்க்குள் வைப்பர். அந்த தேங்காயை குச்சியில் மாட்டி பூஜை செய்த பின்,

பழநி : பழநியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு கிராமப் பகுதிகளில் தேங்காய் சுடுதல் நடைபெற்றது.

மகாபாரதப் போரின்போது 18 நாட்களுக்கு பின் முடிவுக்கு வந்த தர்மத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் தேங்காய் சுட்டு வழிபடுவதாக ஐதீகம். இதில் பாசிப்பருப்பு, வெல்லம், கரும்பு சர்க்கரை, எள், அவலை கலந்து, அதனை தேங்காய்க்குள் வைப்பர். அந்த தேங்காயை குச்சியில் மாட்டி பூஜை செய்த பின், எடுத்துச் சென்று ஆற்றங்க்கரையில் நெருப்பு மூட்டி சுடுவர்.தேங்காய் ஓடு வெடித்த பின் அதில் உள்ள பொருட்களை அனைவருக்கும் பிரசாதமாக வழங்கி உண்பர். இதனால் குடும்பம் வளம் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இதையடுத்து பழநி கிராமப்பகுதியில் குடும்பம் குடும்பமாக தேங்காய் சுட்டு பிரசாதம் வழங்கி வழிபட்டனர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X