இந்தியா

இணைபிரியா நண்பர்கள் துாக்கு போட்டு தற்கொலை

Added : ஆக 04, 2021
Share
Advertisement
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே இணைபிரியா நண்பர்கள் 2 பேர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அடுத்த மேல்சிறுவளூரில் நண்பா சாயுபு மோட்டார் கொட்டாய் அருகே உள்ள மரத்தில் 2 பேர் துாக்கு போட்டு இறந்து கிடந்தனர். வடபொன்பரப்பி போலீசார் விசாரணை நடத்தினர். இருவரும்

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே இணைபிரியா நண்பர்கள் 2 பேர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அடுத்த மேல்சிறுவளூரில் நண்பா சாயுபு மோட்டார் கொட்டாய் அருகே உள்ள மரத்தில் 2 பேர் துாக்கு போட்டு இறந்து கிடந்தனர். வடபொன்பரப்பி போலீசார் விசாரணை நடத்தினர். இருவரும் மேல்சிறுவளூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் மகன் தணிகாசலம், 38; அண்ணாதுரை மகன் கார்த்திக், 25; என தெரியவந்தது. இருவரும் கூலித் தொழிலாளிகள். இணை பிரியாத நண்பர்களாக இருந்துள்ளனர்.

தணிகாசலத்திற்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன் உள்ளார். கார்த்திக்கிற்கு திருமணமாகி ஒரு மாதமே ஆகிறது.இந்நிலையில் இருவரும் துாக்குப்போட்டு இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வடபொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிந்து இருவரும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X