பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்திலும் 'ஆன்லைன்' ஆசிரியர் தகுதி தேர்வு

Updated : ஆக 04, 2021 | Added : ஆக 04, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை: மத்திய அரசை போல, தமிழகத்திலும், 'ஆன்லைன்' வழியில், ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட உள்ளது.ஆசிரியர் பணியில் சேருவதற்கு, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன் தேர்ச்சி சான்றிதழ், ஏழு ஆண்டுகள் செல்லத்தக்கதாக இருந்தது. அதன்பின், மீண்டும் தகுதி தேர்வை எழுத வேண்டி இருந்தது.தற்போது, 'ஒரு முறை தேர்ச்சி பெற்றால் போதும்; அந்த சான்றிதழ் ஆயுள் முழுதும்
TET, Tamilnadu, OnlineExam, ஆசிரியர் தகுதி தேர்வு, தமிழகம், ஆன்லைன் தகுதி தேர்வு

சென்னை: மத்திய அரசை போல, தமிழகத்திலும், 'ஆன்லைன்' வழியில், ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட உள்ளது.

ஆசிரியர் பணியில் சேருவதற்கு, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன் தேர்ச்சி சான்றிதழ், ஏழு ஆண்டுகள் செல்லத்தக்கதாக இருந்தது. அதன்பின், மீண்டும் தகுதி தேர்வை எழுத வேண்டி இருந்தது.தற்போது, 'ஒரு முறை தேர்ச்சி பெற்றால் போதும்; அந்த சான்றிதழ் ஆயுள் முழுதும் செல்லும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்திய ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ், ஆயுள் முழுதும் செல்லும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இன்னும் முடிவை அறிவிக்கவில்லை.


latest tamil news


இந்நிலையில், டிசம்பரில் புதிய கல்வி கொள்கைப்படி, ஆசிரியர் தகுதி தேர்வுகளை, ஆன்லைனில் நடத்த தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. அதை பின்பற்றி, தமிழகத்திலும் ஆன்லைன் வழியில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வு மையம் அமைப்பதற்கு தேவையான கல்லுாரிகளின் பட்டியலை தருமாறு, கல்லுாரி கல்வி இயக்குனரகத்துக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் கடிதம் எழுதி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nirmala - Nattrampalli,இந்தியா
05-ஆக-202117:21:00 IST Report Abuse
Nirmala Hai everybody, I suggest you all ,that first give Eligibility test for our parliament members like all MLA' s especially Education minister . No need to give TET exam for Teachers those who are working in private schools and colleges as teacher. They are very much eligible person for teaching. Pls, consider this..
Rate this:
Cancel
Gayathri Balakrishnan - Sivagangai,இந்தியா
05-ஆக-202114:43:31 IST Report Abuse
Gayathri Balakrishnan அடுத்த தலைமுறைகளை சீர்படுத்தும் ஆசிரியர்களுக்கு தேர்வு வைப்பது தவறு இல்லை. ஆனால் அரசு வேலை கிடைக்கும் வரை தனியாரில் பணிபுரியும் ஆசிரியர்களின் தற்போதைய நிலை என்ன என்பதை சற்று அரசு சிந்திக்க வேண்டும். இனி வரும் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்று அதன் பிறகு பெறக்கூடிய அரசு வேலைக்கு அது வரையாவது உயிருடன் இருக்க வேண்டிய நிலையில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் வறுமையில் உள்ளனர்.
Rate this:
Cancel
Eswaramoorthi - Tamil Nadu,இந்தியா
05-ஆக-202108:19:30 IST Report Abuse
Eswaramoorthi Please don't repeat the same comment
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X