அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜாதியை களைந்து கைகோர்த்து செயல்படுங்கள்; கோவையில் கமல் அறிவுரை

Updated : ஆக 04, 2021 | Added : ஆக 04, 2021 | கருத்துகள் (41)
Share
Advertisement
கோவை: ''ஏழை பணக்காரன் பார்க்காமல், சமூக பொறுப்புள்ள ஒவ்வொருவரும் ஜாதியை களைந்து, கைகோர்த்து செயல்பட வேண்டும்,'' என, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் அறிவுறுத்தினார்.சட்டசபை தேர்தலில் ஓட்டளித்த மக்களுக்கு நன்றி சொல்லவும், கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தவும் கமல் கோவை வந்திருந்தார். கொரோனா தொற்று மீண்டும் பரவ ஆரம்பித்ததால், அரசு
MNM, Kamal, Caste, மக்கள் நீதி மய்யம், கமல், கமல்ஹாசன், ஜாதி

கோவை: ''ஏழை பணக்காரன் பார்க்காமல், சமூக பொறுப்புள்ள ஒவ்வொருவரும் ஜாதியை களைந்து, கைகோர்த்து செயல்பட வேண்டும்,'' என, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் அறிவுறுத்தினார்.

சட்டசபை தேர்தலில் ஓட்டளித்த மக்களுக்கு நன்றி சொல்லவும், கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தவும் கமல் கோவை வந்திருந்தார். கொரோனா தொற்று மீண்டும் பரவ ஆரம்பித்ததால், அரசு தரப்பில் விடுத்த கோரிக்கையை ஏற்று, நிகழ்ச்சிகளை ரத்து செய்து, நலத்திட்ட உதவிகள் மட்டும் வழங்கப்பட்டன. கோவை ஆர்.எஸ்.புரத்தில் கட்சி சார்பில் நடந்த இலவச கொரோனா தடுப்பூசி முகாமை கமல் துவக்கி வைத்தார்; 120 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. ஐந்து சிறு வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி வழங்கினார். அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறையில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தினார்.


latest tamil news


விழாவில், கமல் பேசியதாவது: கொரோனா காலத்தில், எங்களுக்கு பல டாக்டர்கள், செவிலியர்கள் முன்னணி படையாக நின்று உதவியிருக்கிறார்கள். அவர்களுடன் தோள் கொடுத்தது, மக்கள் நீதி மய்ய தொண்டர்களுக்கு பெருமை சேர்த்தது. சடலத்தை எரியூட்டியவர்கள் மதிக்க வேண்டிய சமூக செயல்வீரர்கள். அவர்களது சேவையும் பெருமையும் இதுபோன்ற காலங்களில் தான் தெரியும்.

சேவை குணம் பலருக்கும் தொற்றியிருக்கிறது. இது, இன்னும் பரவ வேண்டும் என்பது ஆசை. தங்களால் இயன்றதை பலரும் செய்து கொண்டிருக்கிறார்கள். இது, மனிதர் மனிதருக்குச் செய்யும் உதவி.கொரோனா தொற்று ஏழை பணக்காரன் பார்ப்பதில்லை; நாமும் பார்க்கக்கூடாது. சமூக பொறுப்புள்ள ஒவ்வொருவரும் ஜாதியை களைந்து, கைகோர்த்து செயல்பட வேண்டும்.இவ்வாறு, கமல் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J. G. Muthuraj - bangalore,இந்தியா
05-ஆக-202100:40:22 IST Report Abuse
J. G. Muthuraj என் பெயரை வைத்து இலகுவாக என்னைப் பற்றியும் என் படைப்புகளை பற்றியும் FB, Google இல் ஓரளவு அறிந்து கொள்ள முடியும். ஏனென்றால், என்னை மறைத்துக் கொள்ள நான் புனைப்பெயரில் எழுதுவதில்லை. உண்மையை நேர்மையாக பேச வேண்டும். சிலர் இதை பயன்படுத்தி, என் பெயரை துஷ்பிரயோகம் செய்கின்றனர்... ஒன்று நன்கு அறிந்து கொள்ளுங்கள்.. கிறிஸ்தவத்திற்கும், வைஷ்ணவத்திற்கும் (கிருஷ்ணா, கிறிஸ்து) ஒற்றுமைகள் பல உள்ளன. இந்திய வரலாற்றில் அநேக வைஷ்ணவர்கள் கிறிஸ்துவின் வழியில் போதனையில் நல்ல பற்று வைத்திருந்தார்கள். அவர்களில் பலர்  கிறிஸ்தவர்கள் ஆகவில்லை. ஆனால், கிறிஸ்துவின் இறைப்பணியை பற்றி நன்கு அறிந்திருந்தனர். ஓரளவில் பின்பற்றவும் செய்தனர். பல சான்றுகள் தருகிறேன்.....ராம் மோகன் ராய் (1772-1833), கேஷப் சந்திர சென் ((1838-1884)), கிருஷ்ண மோகன் பெனர்ஜீ (1813-1885) பாபா பத்மன்ஜி (1831-1906), நாராயண் வாமன் திலக் (1861-1919), பிரமபந்த உற்பத்தியாய (1861-1907) பண்டித ரமாபாய் (1858-1922), ராமகிருஷ்ணா பரமஹம்ஸர் (1836-1886), மணிலால் பரேக் (1885-1867) வணக்கத்துக்குரிய பக்திவேதாந்த ஸ்வாமி பிரபுபாதா அவர்கள் (1896-1977) இவர்கள் எல்லாம், கிறிஸ்து/கிருஷ்ணா மீது மிகுந்த அன்பும் பற்றும் கொண்டவர்கள். பிரம்ம சமாஜத்தின் இந்து மறுமலர்ச்சி பணி இன்னொரு நல்ல உதாரணம். இவர்களையெல்லாம் சில கிறிஸ்தவர்கள் (நான் உட்பட) "கிறிஸ்தவத்திற்கு மிஷனரிகள்" என்று அழைப்பதுண்டு.. இந்த நூற்றாண்டிலும் கூட, கிறிஸ்தவ-வைஷ்ணவ ஐக்கிய குழு வைத்திருக்கிறோம்... வருடம் ஒருமுறை, ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், ஹார்வர்டு பல்கலைக்கழகங்களிலிருந்து அறிஞர்கள், சென்னை மற்றும் பகுதிகளிலுள்ள வைஷ்ணவ பக்தர்கள், சுவாமிகள், அறிஞர்கள் ஒன்று கூடி, இரு சமயங்களின் ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்கிறோம். எங்களுக்கு ஒரே பிரார்த்தனை கூட்டம் தான் உண்டு.... நாங்கள் ஒன்று சேர்ந்து இறைவனை வழிபடுகிறோம். இக்கூடுகை சென்னை, திருப்பதி "ஹரே கிருஷ்ணா" ஆலயங்களில் நடைபெறும்... கமல் போன்ற வைஷ்ணவ குலத்தில் பிறந்து வளர்ந்தவர்கள், கிறிஸ்துவின் பால் ஈர்ப்பினை காண்பிப்பதில் ஆச்சரியமே  இல்லை...அதற்காக அவர்களை பழிப்பது வரலாறுகளை அவமதிப்பதாகும். என்னையும் என் மனுக்குல பணியையும் தரக்குறைவாக பேசுவது என்னை பாதிக்காது....அதின் தீய பலனை நிச்சயம் உன் வாழ்வில் காண்பாய்.... 
Rate this:
Cancel
Ramarao Ramanaidu - Kuala Lumpur,மலேஷியா
04-ஆக-202120:40:42 IST Report Abuse
Ramarao Ramanaidu அன்பே சிவம் படத்தில் கிருத்துவ பிரச்சாரம் அதிகம் இருந்தது ... அதான் படம் அம்போ ... திமுக இவனை ஊத்தி வளக்குது ... இரா. இராமராவ், கோலாலம்பூர், மலேசியா.
Rate this:
Cancel
Ramarao Ramanaidu - Kuala Lumpur,மலேஷியா
04-ஆக-202120:37:22 IST Report Abuse
Ramarao Ramanaidu ஒரு கிருத்துவரான J.G. muthuraj சொல்கிறார் நம்மை அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று ... நீர் முதலில் கண்ணைத் திறந்து பாரும் ... கமல் தானும் தன் பிரதரும் கிருத்துவ மிச்சநரிகள் என்று பலமுறை அறிவித்துவிட்டனர் ... இன்னும் என்ன சான்று வேண்டும் உனக்கு ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X