உரிமைத் தொகை

தமிழக பா.ஜ., தரப்பில், இத்திட்டத்தை உடனே செயல்படுத்துமாறு, அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி, அ.தி.மு.க., சார்பில், சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.உள்ளாட்சித் தேர்தல்சமூக வலைதளங்களிலும், பலர் 'மாதம், 1,000 ரூபாய் வழங்குவது; பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும்; டீசல் லிட்டருக்கு 4 ரூபாயும் குறைப்பது' போன்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததை விமர்சித்து, தி.மு.க.,வுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விரைவில் நகர்ப்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது. இதனால், குடும்ப தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை, தமிழக அரசு, சுதந்திர தினத்தன்று வெளியிட முடிவு செய்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE