கூவம் இப்போ நாறுதே... அதை சரி செய்ய ஒத்துழைத்து, அப்புறமா ஆதிகுடி வரலாற்றை மணக்க மணக்க சொல்லலாமே...

Updated : ஆக 04, 2021 | Added : ஆக 04, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., அரசு இடையே எந்த மாறுபாடும் இல்லை. ஆதிகுடியை தமிழகத்தின் தலைநகரில் இருந்து அப்புறப்படுத்துவதில் இரு கட்சிகளும் குறியாக உள்ளன. கூவம் நதிக்கரையில் தான் எங்களது ஆதிகுடி இருக்கிறது.- நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்'கூவம் இப்போ நாறுதே... அதை சரி செய்ய ஒத்துழைத்து, அப்புறமா ஆதிகுடி வரலாற்றை மணக்க மணக்க சொல்லலாமே...' என சொல்லத்
கூவம் இப்போ நாறுதே... அதை சரி செய்ய ஒத்துழைத்து, அப்புறமா ஆதிகுடி வரலாற்றை மணக்க மணக்க சொல்லலாமே...

தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., அரசு இடையே எந்த மாறுபாடும் இல்லை. ஆதிகுடியை தமிழகத்தின் தலைநகரில் இருந்து அப்புறப்படுத்துவதில் இரு கட்சிகளும் குறியாக உள்ளன. கூவம் நதிக்கரையில் தான் எங்களது ஆதிகுடி இருக்கிறது.
- நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்


'கூவம் இப்போ நாறுதே... அதை சரி செய்ய ஒத்துழைத்து, அப்புறமா ஆதிகுடி வரலாற்றை மணக்க மணக்க சொல்லலாமே...' என சொல்லத் தோன்றும் வகையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி.



உலகில் முதல் மனிதன் தோன்றிய இடம் லெமூரியா கண்டம். இது தான், குமரி கண்டமாக இருந்தது. முதல் தமிழன் தோன்றிய இடம் இந்த குமரிக் கண்டம். இதுகுறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடக்கின்றன. அதற்கு ஆணித்தரமான ஆதாரங்களும் உள்ளன.
- உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி


'எதையும் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என்பதே சரி...' என கூறத் தோன்றும் வகையில், உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி பேச்சு.



தி.மு.க., ஆட்சியின் குறைகளை நேருக்கு நேர் விவாதிக்க நான் தயார். எந்த தி.மு.க., தலைவர்கள் தயாராக உள்ளனர். பொருளாதாரம் குறித்து தமிழக நிதி அமைச்சர் என்னுடன் விவாதிக்க தயாரா?
- பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம்


'நீங்க கூப்பிடுவதை பார்த்தால், 'நானும் ரவுடி தான்' காமெடி தான் நினைவுக்கு வருகிறது...' என சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம் பேட்டி.



தடுப்பூசி சான்றிதழ், கல்வி, அரசு சலுகை போன்ற பல நிலைகளில் ஆவணமாக கருதப்படலாம். எனவே அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வர வேண்டும்.
- புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரரராஜன்


latest tamil news




'ஆதார், பான், வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு, ஓட்டுனர் உரிமம்... என நீளும் இந்த பட்டியலில் தடுப்பூசி சான்றிதழுமா... முடியலை...' என நொந்து கொள்ளும் வகையில், புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரரராஜன் பேச்சு.



கொரோனாவால் ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடியதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு விரைந்து கல்வி புகட்ட வேண்டும் என்பதில், ஆசிரியர்கள் ஆர்வமாக உள்ளனர்.
- தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் மயில்


'அரசு பள்ளி ஆசிரியர்கள் எந்த வேலையும் செய்யாமல், ஒன்றரை ஆண்டுகளாக சம்பளம் வாங்குறாங்க என எல்லாரும் கொதிக்கிறாங்க என்பதால் இப்படி சொல்லுறாரோ...' என நினைக்கத் தோன்றும் வகையில், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் மயில் பேட்டி.



கேரளாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர், கொரோனா பாதிப்புக்கு உள்ளாகவில்லை. அவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதை தான், 'ஐ.சி.எம்.ஆர்.செரோ' ஆய்வு காட்டுகிறது. இதன் பொருள், கேரள அரசின் பாதுகாப்பு நடவடிக்கை சரியான திசையில் செல்கிறது என்பதேயாகும்.
- கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ்


'முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சி போல தெரியுதே...' என கேட்கத் தோன்றும் வகையில், கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் பேட்டி.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
05-ஆக-202105:17:56 IST Report Abuse
meenakshisundaram முன்பெல்லாம் கூவம் நாறுது ன்னு சென்னை சென்றவர்கள் சொன்னது போல இப்போது யாருமே சொல்வதில்ல.ஏனெறால் தமிழகம் முழுதுமே இப்போது நாறுது
Rate this:
Cancel
05-ஆக-202104:23:16 IST Report Abuse
விஜய், கோவை வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை
Rate this:
Cancel
Bharathan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
04-ஆக-202117:44:41 IST Report Abuse
Bharathan கூவம் சீரமைப்பு திட்டம் 1969 முதல் தி மு க திட்டமிடப்பட்ட குளறுபடி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X