பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் பட்ஜெட் கருத்து கேட்பில் மாற்றம்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
சென்னை : கொரோனா பரவல் காரணமாக, வேளாண் பட்ஜெட் தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என, தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அக்கட்சி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், 'வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்' என, முதல்வர்

சென்னை : கொரோனா பரவல் காரணமாக, வேளாண் பட்ஜெட் தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என, தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அக்கட்சி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், 'வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இதற்காக, விவசாயிகள், வேளாண் வல்லுனர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரிடம், கருத்து கேட்பு கூட்டம் நடத்தி, பட்ஜெட் தயாரிக்கவும், அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி, இயக்குனர் அண்ணாதுரை, தோட்டக்கலைத் துறை இயக்குனர் பிருந்தாதேவி உள்ளிட்ட அதிகாரிகள், பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று, கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கொரோனா பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது. அதனால், கூட்டம் கூடுவதை தவிர்க்க, அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, கருத்துகேட்பு கூட்டத்தை, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடத்த, வேளாண் துறையினர் முடிவெடுத்துள்ளனர்.விரைவில், சிறுதானிய சாகுபடியை அதிகரிக்கும் திட்டங்கள் தொடர்பாகவும், இந்த முறையில், கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X