இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி: மல்யுத்தம் பைனலில் ரவிக்குமார்

Updated : ஆக 05, 2021 | Added : ஆக 04, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
டோக்கியோ: ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர்கள் ரவிகுமார் தாஹியா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம், இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கத்தை ரவிக்குமார் உறுதி செய்தார்.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. 12வது நாளான இன்று (ஆக.,04) மல்யுத்தத்தில் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 57 கிலோ எடைப்பிரிவில்
Olympics, Wrestling, IND, DeepakPunia, RaviKumarDahiya, Semi Final,

டோக்கியோ: ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர்கள் ரவிகுமார் தாஹியா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம், இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கத்தை ரவிக்குமார் உறுதி செய்தார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. 12வது நாளான இன்று (ஆக.,04) மல்யுத்தத்தில் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவிகுமார் தாஹியா, கொலம்பியா வீரரை எதிர்கொண்டார். இதில், 13-2 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிப்பெற்றார். காலிறுதியில் பல்கேரியா வீரருடன் மோதியதில் 14-4 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிப்பெற்று அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.


பைனலில் ரவிக்குமார்


latest tamil news


இதனை தொடர்ந்து நடந்த அரையிறுதி போட்டியில், 57 கிலோ பிரி ஸ்டைல் பிரிவில், ரவிக்குமார் தாஹியா, நுரிஸ்லாம் சனாயேவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இதன் மூலம் இந்தியாவிற்கு தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் கிடைப்பது உறுதியாகி உள்ளது.
வெண்கலத்திற்கு போட்டி


மல்யுத்தத்தில் 86 கிலோ எடைப்பிரிவில் மற்றொரு இந்திய வீரர் தீபக் புனியா, நைஜீரிய வீரரை 12-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி எளிதாக காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் சீன வீரருடன் மோதிய தீபக் புனியா 6-3 என்ற புள்ளிக்கணக்கில் வென்றதுடன் அரையிறுதிக்கு முன்னேறினார்.


latest tamil newsதொடர்ந்து நடந்த அரையிறுதி போட்டியில், அமெரிக்க வீரர் டேவிட் டெய்லரிடம் 10 - 0 என்ற புள்ளிக்கணக்கில் தீபக் புனியோ தோல்வியடைந்தார். இதனை தொடர்ந்து அவர் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் விளையாட உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
05-ஆக-202113:34:44 IST Report Abuse
Vena Suna மல்யுத்தத்தில் ஒரு தமிழனும் வர மாட்டேன்கிறானே...வீரன் என்று சொல்வதில் மட்டும் சூரனோ?
Rate this:
Cancel
KayD - Mississauga,கனடா
04-ஆக-202118:39:40 IST Report Abuse
KayD முதல் ஆண் வெற்றி . வாழ்த்துக்கள். final la best a kodunga gold a edunga. ungal vetri edhu irundhaalum ungal uzhaippu ku kidaikum parisu next unga family / frinds kodukum support and your team support at the end Pride to the Nation. You are great. Veti thodarattum
Rate this:
Cancel
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
04-ஆக-202117:24:31 IST Report Abuse
Sankar Ramu வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X