மாடுகளை காப்பாற்ற ரூ.6 லட்சம் நிதியுதவி

Added : ஆக 04, 2021
Share
Advertisement
தஞ்சாவூர் : தீவனம் இன்றி பசியோடு இருக்கும் பசுமாடுகளை காப்பாற்ற சிட்டி யூனியன் வங்கி சார்பில் ரூ.6 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்த சகோதரர்கள் கணேஷ், சுவாமிநாதன். இவர்கள் பைனான்ஸ் நிறுவனம், பால் பண்ணை ஆகியவற்றை நடத்தி வருகின்றனர். பைனான்ஸ் நிறுவனத்தில் மோசடி செய்ததாக குவிந்த புகாரால் தலைமறைவாக உள்ள கணேஷ்,
 மாடுகளை காப்பாற்ற ரூ.6 லட்சம் நிதியுதவி


தஞ்சாவூர் : தீவனம் இன்றி பசியோடு இருக்கும் பசுமாடுகளை காப்பாற்ற சிட்டி யூனியன் வங்கி சார்பில் ரூ.6 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்த சகோதரர்கள் கணேஷ், சுவாமிநாதன். இவர்கள் பைனான்ஸ் நிறுவனம், பால் பண்ணை ஆகியவற்றை நடத்தி வருகின்றனர். பைனான்ஸ் நிறுவனத்தில் மோசடி செய்ததாக குவிந்த புகாரால் தலைமறைவாக உள்ள கணேஷ், சுவாமிநாதன் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

கும்பகோணம் அருகே கொற்கை கிராமத்தில், இவர்களுக்கு சொந்தமான பால் பண்ணையில், 383 பசுமாடுகள் தீவனம் இல்லாமல் பசியோடு இருப்பதாக, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு தகவல் கிடைத்தது. கடந்த வாரம் கும்பகோணம் ஆர்.டி.ஓ., சுகந்தி, தாசில்தார் கண்ணன் மற்றும் கால்நடைத் துறையினர் பண்ணையில் ஆய்வு நடத்தினர். அப்போது, மாடுகளை பராமரிக்க நாளொன்றுக்கு, 60 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என கணக்கிட்டு, தன்னார்வலர்களிடம் நிதியுதவி பெற்று தீவனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில், சிட்டி யூனியன் வங்கியின் சமூகப் பொறுப்பு நிதியில் இருந்து, 6 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, ஆர்.டி.ஓ., சுகந்தியிடம் வங்கி நிர்வாகத்தினர் நேற்று வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X