அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க மாநில அளவிலான குழு; பா.ஜ., அமைத்தது

Updated : ஆக 04, 2021 | Added : ஆக 04, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு மாநில அளவிலான குழுவை பா.ஜ., அமைத்துள்ளது.தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை. திருப்பத்தூர், நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய ஒன்பது மாவட்டங்களில், செப்டம்பர் 15 க்குள் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து உள்ளாட்சி தேர்தலை சந்திக்க
Tamilnadu, BJP, Local Body Elections, தமிழகம், பாஜக, பாஜ, உள்ளாட்சி தேர்தல், குழு அமைப்பு

சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு மாநில அளவிலான குழுவை பா.ஜ., அமைத்துள்ளது.

தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை. திருப்பத்தூர், நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய ஒன்பது மாவட்டங்களில், செப்டம்பர் 15 க்குள் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. அந்த வகையில், இந்த 9 மாவட்டங்களில் உள்ள அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இன்று முதல் 4 நாட்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தவுள்ளனர்.


latest tamil news


இந்நிலையில், அதிமுக உடன் கூட்டணியில் உள்ள பா.ஜ., உள்ளாட்சி தேர்தலை சந்திக்க மாநில அளவிலான குழுவை அமைத்துள்ளது. அக்குழுவில், முன்னாள் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில துணை தலைவர்கள் நயினார் நாகேந்திரன், வி.பி.துரைசாமி, எம்.என்.ராஜா, பொது செயலர்கள் கே.டி.ராகவன், செல்வகுமார், ராம ஸ்ரீனிவாசன், கரு.நாகராஜன், செயலாளர் கார்த்தியாயினி, மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.ஆர்.காந்தி, சரஸ்வதி, சசிகலா புஷ்பா, மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன், சிறப்பு அழைப்பாளர்கள் ராமலிங்கம், கு.க.செல்வம், சம்பத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
04-ஆக-202117:14:22 IST Report Abuse
Rajas எடப்பாடி சாதாரண ஆளில்லை. கொங்கு பகுதி தனி யூனியன் என்று சொல்லி விட்டர்கள். அந்த கொங்கு யூனியன் பகுதிக்கு நாங்கள் இன்னமும் மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகளை நியமனம் செய்யவில்லை. அது முடிந்தவுடன் இந்த உள்ளாட்சி தேர்தல் பற்றி பேசலாம் என்று இவர்களை ஓட விட்டு விடுவார்.
Rate this:
Cancel
Tamilan - Kongu Nadu,இந்தியா
04-ஆக-202116:55:39 IST Report Abuse
Tamilan மதக்கலவரம் ஏற்படுத்த பாஜக முயற்சி செய்கிறது......நீ திமுக 200 உபி.....பாஜக வந்த பின் எங்கே கலவரம்.? ஏற்படுத்திய ஆட்கள் எல்லாமே காங்கிரஸ் என நீதிமன்றத்தில் சொல்லப்பட்டது. ஊழல் மத, சாதி வன்கொடுமை மற்றும் பாலியல் கொடுமைகளை ஒழிக்க திமுக கம்பெனி ஒழிய வேண்டும்.......
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
04-ஆக-202116:39:46 IST Report Abuse
பாமரன் அலோ யுவர் ஹானர்... கட்சியில் இருக்கும் அத்தனை பேர் பெயரும் வந்திருக்கு.. ஆனால் எங்க சாரண ராசா குச்சுபூஜி மதுவாந்திஜீ நமீதாஜீ காயுஜீ ஜீவஜோதிஜி மாதிரி மிச்சப்பேர் மாத்திரம் என்ன பாவம் பண்ணுனாங்கலாம்...
Rate this:
sivan - seyyur,இந்தியா
05-ஆக-202103:24:18 IST Report Abuse
sivan இது என்ன அநாகரீகமான விமரிசனம்?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X