உலகின் மிகச்சிறந்த மாணவராக இந்திய வம்சாவளி சிறுமி தேர்வு: அமெரிக்க பல்கலை அறிவிப்பு

Updated : ஆக 04, 2021 | Added : ஆக 04, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
வாஷிங்டன்: உலகின் மிகச் சிறந்த மாணவர்களில் ஒருவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நடாஷா பெரி என்னும் சிறுமியை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை தேர்ந்தெடுத்து உள்ளது.அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது: நியூஜெர்சியில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 11 வயது நடாஷா பெரி, ஜான்ஸ்

வாஷிங்டன்: உலகின் மிகச் சிறந்த மாணவர்களில் ஒருவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நடாஷா பெரி என்னும் சிறுமியை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை தேர்ந்தெடுத்து உள்ளது.latest tamil newsஅமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது: நியூஜெர்சியில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 11 வயது நடாஷா பெரி, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலையின் 2020 - 21 இளம் திறமையாளர்கள் தேடல் மையத்தில் பதிவு செய்திருந்த சுமார் 19,000 மாணவர்களில் ஒருவராவார். இவர், அமெரிக்காவின் கல்வி ஊக்கத் தொகை தகுதித் தேர்வு (சாட்) மற்றும் அமெரிக்க கல்லூரி நுழைவுத் தேர்வு (ஆக்ட்) ஆகிய தேர்வுகளில் வெளிப்படுத்தியுள்ள திறமையை அடிப்படையாகக் கொண்டு, உலகின் தலைசிறந்த மாணவர்களில் ஒருவராக, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை இவரை தேர்ந்தெடுத்து உள்ளது.


latest tamil newsதற்போது 5ம் வகுப்பு படித்து வந்தாலும், தகுதித் தேர்வுகளில் அவர் அளித்த பதில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு இணையான திறன் கொண்டதாக இருந்தது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் கல்லூரியில் இணைந்து படிக்க விரும்பும் மாணவர்கள் சாட் அல்லது ஆக்ட் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
09-ஆக-202117:58:27 IST Report Abuse
kalyanasundaram HAD SHE BEEN IN INDIA HER FATE IS ENTIRELY DIFFERENT. IN FOREIGN COUNTRIES MERRIT IS PRIME AND IN INDIA E.
Rate this:
Cancel
Trichy Mahadevan - Coimbatore,இந்தியா
04-ஆக-202118:19:02 IST Report Abuse
Trichy Mahadevan வாழ்க வளமுடன்.
Rate this:
Cancel
T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
04-ஆக-202111:42:20 IST Report Abuse
T.Senthilsigamani வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X