எதிர்க்கட்சியினர் அமளியால் பிரதமர் வேதனை: பார்லி.,யை இழிவுபடுத்துவதாக கோபம்

Updated : ஆக 05, 2021 | Added : ஆக 04, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி :தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு பார்லி.,யின் மரபு மற்றும் அரசியல் சாசனத்தை எதிர்க்கட்சிகள் இழிவுபடுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி வேதனை தெரிவித்து உள்ளார்.பா.ஜ., பார்லிமென்ட் குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டில்லியில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் பேசியது தொடர்பாக பார்லி., விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, வெளியுறவுத் துறை இணையமைச்சர்
பார்லிமென்ட், பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகள்

புதுடில்லி :தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு பார்லி.,யின் மரபு மற்றும் அரசியல் சாசனத்தை எதிர்க்கட்சிகள் இழிவுபடுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி வேதனை தெரிவித்து உள்ளார்.

பா.ஜ., பார்லிமென்ட் குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டில்லியில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் பேசியது தொடர்பாக பார்லி., விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, வெளியுறவுத் துறை இணையமைச்சர் முரளீதரன் ஆகியோர் கூறியதாவது: மருத்துவக் கல்வியில் ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதமும், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீதமும் ஒதுக்கீடு அளித்து உத்தரவு பிறப்பித்ததற்காக பிரதமர் மோடிக்கு எம்.பி.,க்கள் வாழ்த்து தெரிவித்தனர். 'பெகாசஸ்' உளவு மென்பொருள் வாயிலாக போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக பார்லி.,யில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கையில் இருந்து அறிக்கையை பறித்து அதை கிழித்து வீசினர். லோக்சபாவில் காகிதங்களை கிழித்து சபாநாயகரை நோக்கி வீசினர்.எதிர்க்கட்சியினரின் இந்த வரம்பு மீறிய அமளி பார்லி.,யை அவமதிப்பதாக அமைந்துள்ளதாக பிரதமர் வேதனை தெரிவித்தார்.

பார்லிமென்டையும், நம் அரசியல் சாசனத்தையும் இழிவுபடுத்தும் வகையில் எதிர்க்கட்சியினர் செயல்படுவதற்கும் பிரதமர் கடும் கோபத்தை வெளிப்படுத்தினார். எதிர்க்கட்சியினர் மோசமாக நடந்து கொண்டாலும் அமைதியுடன் இருந்து பார்லி.,யின் மாண்பை காப்பாற்ற வேண்டும் என பா.ஜ., - எம்.பி.,க்களிடம் அவர் வலியுறுத்தினார்.முக்கியத்துவம் இல்லாத பிரச்னை என மத்திய அரசால் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டும், போன் ஒட்டு கேட்பு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துவது ஜனநாயகத்துக்கு எதிரானது. மக்களின் பிரச்னைகள் மீதான அவர்களது அக்கறையின்மையையே இது காட்டுகிறது என மோடி வேதனை தெரிவித்தார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

''கொரோனா பரவல் காலத்திலும் ஜூலை மாத ஜி.எஸ்.டி., வசூல் அதிகரித்துள்ளது. பொருளாதார சிக்கல்களில் சிக்கி தவித்த வங்கித் துறை 31 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த கூட்டத்தில் தெரிவித்தார்.


சைக்கிள் பேரணி


காங்., முன்னாள் தலைவர் ராகுல் விடுத்த அழைப்பை ஏற்று, நேற்று நடந்த விருந்தில் பல எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை உறுதி செய்வதற்காக இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில் 100க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். மாயாவதியின் பகுஜன் சமாஜ், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி சார்பில் யாரும் இதில் பங்கேற்கவில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வைக்கண்டித்து பார்லி நோக்கி ராகுல் தலைமையில் சைக்கிள் பேரணியும் நேற்று நடத்தப்பட்டது.


'டிஜிட்டல் மயமான ரேஷன் செயல்பாடு'


வறுமை ஒழிப்பு திட்டத்தின்கீழ் பயன்பெற்ற குஜராத்தைச் சேர்ந்தவர்களுடன் 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் பிரதமர் மோடி நேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து ரேஷன் திட்டத்துக்கான ஒதுக்கீடு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வந்தது. உணவுப் பொருட்களை சேகரிக்கும் கிடங்குகளின் எண்ணிக்கை அதிகரித்தது.
ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பொருட்களும் அதிகரித்தன. ஆனால் ஏழை மக்களுக்கு பலன் கிடைக்கவில்லை. அவர்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்கவில்லை.இதற்கு காரணம், சரியான செயல் திட்டம் இல்லாததே. கடந்த 2014ல் பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின் ரேஷன் கார்டுகளுடன் ஆதார் இணைக்கப்பட்டது. இதன் வாயிலாக கோடிக்கணக்கான போலி கார்டுகள் நீக்கப்பட்டன. ரேஷன் செயல்பாடுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டன. இதனால் ரேஷனில் மோசடி செய்வது தடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-ஆக-202123:35:04 IST Report Abuse
பேசும் தமிழன் அவர்களுக்கு நேரம் போக வேண்டும் அல்லவா.... கேன்டினி‌ல் போய் டீ, வடை சாப்பிடவும் வெளி நடப்பு என்று சொல்லி கூத்து அடித்து கொண்டு உள்ளனர்
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
04-ஆக-202122:34:39 IST Report Abuse
தமிழவேல் போன் ஒட்டு கேட்பு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கேட்பது, எப்படி ஜனநாயகத்துக்கு எதிரானதாக்கும் ? நேரத்தை வீணாக்குவதற்குப்பதில், இன்னொருநாள் செய்யப்போவதை இன்றே செய்வதில் என்ன தவறு ? // போன் ஒட்டு கேட்பு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துவது ஜனநாயகத்துக்கு எதிரானது.//
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
04-ஆக-202122:32:13 IST Report Abuse
தமிழவேல் வரி விதிப்பிலும் வரி வருவாயிலும் சந்தோஷப படுற ஒரே நாடு. //''கொரோனா பரவல் காலத்திலும் ஜூலை மாத ஜி.எஸ்.டி., வசூல் அதிகரித்துள்ளது. பொருளாதார சிக்கல்களில் சிக்கி தவித்த வங்கித் துறை 31 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது,''//
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X