அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஆன்லைன்' ரம்மி தடைக்கு விரைவில் புதிய சட்டம்: அமைச்சர் தகவல்

Updated : ஆக 04, 2021 | Added : ஆக 04, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில், 'ஆன்லைன்' ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கும் புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு நவம்பரில், 'ஆன்லைன் ரம்மி, போக்கர்' போன்ற விளையாட்டுகளுக்கு தடை விதித்து, தமிழக அரசு சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், 'ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ்' உள்ளிட்ட நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன.
Online Rummy, Ban, Tamilnadu, தமிழகம், ஆன்லைன் ரம்மி, தடை, புதிய சட்டம், அமைச்சர், ரகுபதி

சென்னை: தமிழகத்தில், 'ஆன்லைன்' ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கும் புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பரில், 'ஆன்லைன் ரம்மி, போக்கர்' போன்ற விளையாட்டுகளுக்கு தடை விதித்து, தமிழக அரசு சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், 'ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ்' உள்ளிட்ட நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இம்மனுக்களை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் ஏ.கே.கங்குலி, அபிஷேக்மனு சிங்வி, அரியமா சுந்தரம், பி.எஸ்.ராமன் உள்ளிட்டோர் வாதாடினர்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் அரசு, ஆன்லைன் விளையாட்டுகளுக்கு மட்டும் தடை விதித்து, சட்டம் இயற்றி உள்ளதாகவும், இதில் திறமை அடங்கி இருப்பதாகவும், சூதாட்டம் இல்லை என்றும் வாதிட்டனர்.


latest tamil news


தமிழக அரசு சார்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ''ஆன்லைன் விளையாட்டால் பலர் ஏமாற்றப்பட்டு உள்ளனர்; தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. பொது நலன் கருதியே, இந்த சட்டம் இயற்றப்பட்டது,'' என்றார்.

இரு தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை, முதல் பெஞ்ச் நேற்று (ஆக.,03) பிறப்பித்தது. அதில், 'முறைப்படுத்துவதற்கு உரிய விதிகள் இல்லாமல், ஒட்டுமொத்தமாக ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு தடை விதிக்க முடியாது. உரிய காரணங்களை தெரிவிக்காமல் பிறப்பிக்கப்பட்ட, இந்தச் சட்டம் செல்லத்தக்கது அல்ல' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மேலும், 'உரிய விதிகளுடன், புதிய சட்டம் இயற்ற அரசுக்கு தடை ஏதும் இல்லை' எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.


latest tamil news


இந்நிலையில் இது தொடர்பாக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆன்லைன் ரம்மி விளையாட்டை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது. ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் புதிய சட்டம் விரைவில் கொண்டுவரப்பட்டு தாமதமின்றி தடை செய்யப்படும். பொதுநலன் மிகவும் முக்கியம் என்பதால் உரிய விதிமுறைகள், தகுந்த காரணங்களுடன் சட்டம் கொண்டுவர வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவுக்கு இணங்க, புதிய சட்டம் விரைவில் கொண்டுவரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Madurai,இந்தியா
04-ஆக-202119:28:09 IST Report Abuse
Kumar பேசாம கொள்கை முடிவு எடுத்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு அனுமதி கொடுத்து விடலாமே?அரசே சூதாட்டம் நடத்தலாமே.பணம் கொட்டுமே? தமிழனை சுலபமாக அடிமை ஆக்கிவிடலாமே. வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
gilbert - vienna,ஆஸ்திரியா
04-ஆக-202117:55:29 IST Report Abuse
gilbert இன்னோரு ஆம்னி பஸ் கத. எப்பல்லாம் கையில காசு கொறையுதோ அப்பல்லாம் இந்த டையாலக்கை வுட்டாப்போதும் கொணாந்து கொட்டிறமாட்டாய்ங்க.
Rate this:
Cancel
Tamilan - Kongu Nadu,இந்தியா
04-ஆக-202116:50:28 IST Report Abuse
Tamilan கடந்த அஇஅதிமுக பொதுமக்களின் நலன் கருதி தடை செய்தது.....தற்போதைய அரசு முதலாளிகளின் நலன் கருதி நீக்கிவிட்டது......வாதாடியது காங்கிரஸ் ஆட்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X