பொது செய்தி

இந்தியா

48 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி இந்தியா புதிய சாதனை

Updated : ஆக 04, 2021 | Added : ஆக 04, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை, நேற்று 48 கோடியைக் கடந்துள்ளது. இன்று காலை 7:00 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 56,83,682 முகாம்களில் 48,52,86,570 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 62,53,741 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.இந்தியாவில் இதுவரை 3,09,33,022 பேர் கொவிட்

புதுடில்லி: இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை, நேற்று 48 கோடியைக் கடந்துள்ளது.

இன்று காலை 7:00 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 56,83,682 முகாம்களில் 48,52,86,570 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 62,53,741 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.latest tamil newsஇந்தியாவில் இதுவரை 3,09,33,022 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்து உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 36,668 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் 97.37 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 42,625 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தொடர்ந்து 38 நாள்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது.


latest tamil newsஇந்தியாவில் கோவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,10,353 ஆக உள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 1.29 சதவீதமாகும். கடந்த 24 மணி நேரத்தில் 18,47,518 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 47,31,42,307 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா
04-ஆக-202113:43:34 IST Report Abuse
Veeraputhiran Balasubramoniam தடுப்பூசி ஆபத்து எடுத்துக்கொள்லாதீர், தலவர்கள் எடுக்க வில்லை என் காட்டுத்டீ போல் செய்தி பரப்பிய போடாதே என மக்களை பய்முறுத்திய போதுமக்களின் எதிரியாக செயல் பட்ட ஊடகங்க்கள் உண்மைக்கு புறம்பான செய்தி வைது விவாதங்க்கல் செய்தன.. ஆனால் அதே ஊடகங்க்கல் இன்று மக்களுக்கு நல்லது நடந்துள்லது என்பதனை சொல்ல கூட த்யங்க்குகிறன ஏன்.
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
04-ஆக-202116:19:46 IST Report Abuse
Mirthika Sathiamoorthiஎதிர்க்கட்சி அவங்க சுயலாபத்துக்கு அரசியல் செய்யத்தான் செய்வாங்க...ஆளும்தரப்பு இதையெல்லாம் முறியடிச்சு மக்களுக்கு தடுப்பூசியை கொண்டு சேர்த்திருக்கணுமா இல்லையா? தடுப்பூசியின் அவசியம் குறித்தும் அதன் பாதுகாப்பு குறித்தும் என்ன விழிப்புணர்வு மக்களிடம் கொண்டுபோனீங்க? போனவருடம் மார்ச்சில் தடுப்பூசிக்கான ஆராய்ச்சி தொடங்கி டிசம்பரில் தடுப்பூசி தயாரிச்சாச்சு..130 கோடி மக்கள் தடுப்பூசி போடா பலதயக்கமும் தடையும்வரும்ன்னு நமது முந்தைய தொற்றுபரவளின்போது அதைகையாண்டவிதத்திலும் நாம் கற்றுகொண்டபாடம் அதிகம்...இதை எல்லாம் மனதில்வைத்து முன்னெச்சரிக்கையாய் யார் இருக்கணும்? மக்களின் எதிரியாக செயல் பட்ட ஊடகங்க்கள்? அரசு இல்லை? டிசம்பரில் தொடங்கி ஆகஸ்ட் வெறும் 48 கோடிபேர் இதில் இரண்டு டோஸ் போட்டவங்க எத்தனைபேர் தெரியுமா? இந்தவருட முடிவில் 100 பேருக்கு 2 டோஸ் இலக்கு..இதில் ஊசியின் வீரியம் வெறும் 9 மாதங்கள் மட்டுமே. இன்னும் எத்தனைகாலத்துக்கு அடுத்தவன்மேலே பழிபோட்டுக்கிட்டு உங்களின் தவறுகளை மறைக்க பாப்பீங்க?...
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
04-ஆக-202116:20:58 IST Report Abuse
Mirthika SathiamoorthiPlease don't repeat the same comment...
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
04-ஆக-202113:06:46 IST Report Abuse
 N.Purushothaman பதினெட்டு வயதிற்கு கீழ் உளோர்களுக்கும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டால் அது இன்னுமும் நல்ல முன்னேற்றத்தை தரும் .....அதே நேரத்தில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை குறைக்க மக்களும் மாநில அரசும் முழு ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே இந்த வைரஸ் மேலும் உருமாற்றம் அடைவதை தவிர்க்க முடியும் ...இல்லையெனில் உருமாற்றம் அடைந்து வீரியமடைந்துவிட்டால் தற்போது செலுத்தும் தடுப்பு ஊசிகள் கூட ஒரு கட்டத்தில் பயனற்றதாகி விடும் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X