பொது செய்தி

தமிழ்நாடு

ஊர்புற நூலகர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க நூலகர்கள் கோரிக்கை

Added : ஆக 04, 2021
Share
Advertisement
வேலூர்: ஊர்புற நூலகர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக நூலகத்துறை கட்டுப்பாட்டில், கிராமப்பகுதிகளில் 1,900 ஊர்புற நூலகங்கள் உள்ளது. இங்கு பணியாற்றும் ஊர்புற நூலகர்களுக்கு மாதம் 12 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படுகின்றது. தங்களுக்கு காலமுறை ஊதியம், பதவி உயர்வு, பி.எப்., இ.எஸ்.ஐ., வசதி, ஓய்வூதியம் வழங்க வேண்டும் என ஊர்புற நூலகர்கள்

வேலூர்: ஊர்புற நூலகர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக நூலகத்துறை கட்டுப்பாட்டில், கிராமப்பகுதிகளில் 1,900 ஊர்புற நூலகங்கள் உள்ளது. இங்கு பணியாற்றும் ஊர்புற நூலகர்களுக்கு மாதம் 12 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படுகின்றது. தங்களுக்கு காலமுறை ஊதியம், பதவி உயர்வு, பி.எப்., இ.எஸ்.ஐ., வசதி, ஓய்வூதியம் வழங்க வேண்டும் என ஊர்புற நூலகர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இது குறித்து ஊர்புற நூலகர்கள், ‛கிளை நூலகங்களில் மேற்கொள்ளப்படும் பணிகளையே நாங்கள் செய்து வருகிறோம், எங்கள் பணியை முறைபடுத்த வேண்டும்,' என கோரிக்கை வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X