டில்லியில் சிறுமி பலாத்காரம் செய்து கொலை: ராகுல், கெஜ்ரிவால் ஆறுதல்| Dinamalar

டில்லியில் சிறுமி பலாத்காரம் செய்து கொலை: ராகுல், கெஜ்ரிவால் ஆறுதல்

Updated : ஆக 04, 2021 | Added : ஆக 04, 2021 | கருத்துகள் (32)
Share
புதுடில்லி: டில்லியில் 9 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதுடன், யாருக்கும் தெரியாமல் உடல் தகனம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை, காங்கிரஸ் எம்.பி., ராகுல் மற்றும் கெஜ்ரிவால் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.டில்லியின் தென் மேற்கு
Rahul, rahul gandhi, delhi, girl, Arvind Kejriwal,Aam Aadmi Party,Delhi,Kejriwal,ஆம் ஆத்மி,கெஜ்ரிவால்,டில்லி

புதுடில்லி: டில்லியில் 9 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதுடன், யாருக்கும் தெரியாமல் உடல் தகனம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை, காங்கிரஸ் எம்.பி., ராகுல் மற்றும் கெஜ்ரிவால் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.

டில்லியின் தென் மேற்கு பகுதியில் உள்ள கன்டோன்மென்ட் பகுதியில் 9 வயது சிறுமி ஒருவர், அருகில் இருந்த இடுகாட்டில் உள்ள கூலரில் தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது, இடுகாட்டின் பூசாரி மற்றும் ஊழியர்கள் 3 பேர் சேர்ந்து சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், அந்த சிறுமியை கொலை செய்து பெற்றோருக்கு தெரியாமல் எரித்துள்ளனர். தண்ணீர் எடுக்க சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் திரும்பாததால், பெற்றோர் தேடி உள்ளனர். அப்போது, அவர்களை அழைத்த 4 பேரும், சிறுமியின் உடலை காண்பித்து, தண்ணீர் எடுக்கும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து போலீசாரிடம் தெரிவிக்க வேண்டாம். பிரேத பரிசோதனையின் போது, உடல் உறுப்புகளை திருடிவிடுவார்கள் என தெரிவித்தனர். இருப்பினும், சந்தேகம் ஏற்பட்டதால், சம்பவம் தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் 4 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது, 302, 376 and 506 ஆகிய பிரிவுகளின் கீழும், போக்சோ சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய பின்னர் காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியதாவது: கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் பேசினேன். அவர்களுக்கு நீதி மட்டுமே தேவை. வேறு ஏதும் வேண்டாம் என்றனர். தங்களுக்கு நீதி வழங்கப்படாது என அவர்கள் தெரிவித்தனர். அவர்களுக்கு நாம் உதவ வேண்டும். அதை நாங்கள் செய்வோம். உங்களுக்கு நான் ஆதரவாக இருப்பேன் என தெரிவித்தேன். நீதி கிடைக்கும் வரை ராகுல் ஆகிய நான் துணை இருப்பேன் என தெரிவித்தார்.

சிறுமியின் பெற்றோரை, டில்லி முதல்வர் கெஜ்ரிவாலும் சந்தித்து ஆறுதல் கூறினார்.


latest tamil news


பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், பெற்றோரை நான் சந்தித்தேன். சிறுமியின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. இருப்பினும் டில்லி அரசு, ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும். சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்படும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க சிறந்த வழக்கறிஞர் நியமிக்கப்படுவார் என தெரிவித்தார்.
தென்கிழக்கு டில்லி போலீஸ் கமிஷனர் இங்கித் பிரதாப் சிங் கூறியதாவது: குற்றவாளிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை மற்றும் போதை மருந்து பரிசோதனை நடத்தப்படும். வழக்கு விசாரணை துவக்கத்தில், சிறுமியின் பெற்றோர் மின்சாரம் தாக்கியதால் தான் தங்களது மகள் உயிரிழந்ததாக தெரிவித்தார். குற்றவாளிகளும் இதனை தான் கூறினர். விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வோம் எனக்கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X