பொது செய்தி

தமிழ்நாடு

உள்நாட்டிலேயே ராணுவ தளவாடங்கள் உற்பத்தி: ஜனாதிபதி வலியுறுத்தல்

Updated : ஆக 04, 2021 | Added : ஆக 04, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஊட்டி: பாதுகாப்பு துறை தயாராக இருக்க ராணுவ தளவாடங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து சுய சார்பு நிலையை எட்ட வேண்டும் என, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.நீலகிரி மாவட்ட குன்னூர் வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் 77 வது பயிற்சி முடித்த இந்தியா, இலங்கை, பூடான், வங்கதேசம் உட்பட 19 நட்பு நாடுகளைச் சார்ந்த 30 அதிகாரிகள் உட்பட பயிற்சி முடித்த 479 அதிகாரிகளுடன்
ஜனாதிபதி, ராம்நாத், ராம்நாத்கோவிந்த்,

ஊட்டி: பாதுகாப்பு துறை தயாராக இருக்க ராணுவ தளவாடங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து சுய சார்பு நிலையை எட்ட வேண்டும் என, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.

நீலகிரி மாவட்ட குன்னூர் வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் 77 வது பயிற்சி முடித்த இந்தியா, இலங்கை, பூடான், வங்கதேசம் உட்பட 19 நட்பு நாடுகளைச் சார்ந்த 30 அதிகாரிகள் உட்பட பயிற்சி முடித்த 479 அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

அப்போது, ஜனாதிபதி பேசியதாவது: 1948 ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இக்கல்லூரி நாட்டின் புகழ்மிக்க பாதுகாப்பு பயிற்சி கல்லூரியாக திகழ்கிறது. கடுங்குளிர் நிலவும் இப்பகுதியில் சராசரி 11 டிகிரி காலநிலை இருந்த போதிலும் அதை சவாலாக எடுத்து அதிகாரிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். கொரோனா காலத்தில் இக்கல்லூரி தடையின்றி பயிற்சி அளித்திருப்பது பாராட்டுக்குரியது.


latest tamil newsஅண்மையில் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு சென்ற போது பல்வேறு சவால்களுக்கிடையே பாதுகாப்பு படையினர் துணிச்சலுடனும், அர்ப்பணிப்புணர்வுடன் பணியாற்றி வருகின்றனர். தற்போது, நாடு பல்வேறு சவால்களை எதிர்கொண்டுவருகிறது. நாட்டை பாதுகாக்க பாதுகாப்பு படையினர் ஒரு மித்த சிந்தனை மற்றும் ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டும். பாதுகாப்பு துறை தயாராக இருக்க ராணுவ தளவாடங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து சுய சார்பு நிலையை எட்ட வேண்டும்.

இதுமட்டுமின்றி சைபர் வழி அச்சுறுத்தல்களை நாடு எதிர்கொள்ள சிறந்த தொழில்நுட்பத்துடன் கூடிய திட்டம் தேவைப்படுகிறது. 21வது நூற்றாண்டு அறிவுசார் சமுதாயத்தை சார்ந்துள்ளது, இதனால் உருவாகும் மாற்றங்களிலிருந்து நாட்டின் நலன்களை பாதுகாக்க நாம் தயார்படுத்தி கொள்ள வேண்டும். பாடத்திட்டத்தின்போது உங்களுக்கு புரிந்துகொள்ள உதவும் விரிவான யுக்திகள் அவசியம்.எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த வித்தைகளை கையாள்வது, எவ்வாறு திட்டமிட வேண்டும் என்பதும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கையாள புதிய பரிமாணங்களை எப்படி எதிர் கொள்வது என்பது குறித்தும் அறிவது அவசியம்.நீலகிரி மலைகளின் இயற்கை அழகும், இப்பகுதியின் பெயர்சொல்லுக்கு ஏற்ற காலநிலையும் கற்றலுக்கு சிறந்ததாக உள்ளது.ராணுவ படையினருக்கு புதிய முயற்சி தேவை.


latest tamil news
இனி வரும் காலங்களில் அறிவு சார்ந்த போராக இருக்கும் என்பதால் இந்த போராட்டத்துக்கு ராணுவ படையினர் தயாராக இருக்க வேண்டும். இதன் அடிப்படையில் இந்த கல்லூரி இயங்குகிறது. இவர்களின் குறிக்கோள் போருக்கு அறிவோடு செல்வது என்ற கொள்கையின் அடிப்படையில் செல்ல வேண்டும்.கடந்த காலத்தின் அனுபவம், கல்வி ஆகிய இரண்டையும் சேர்த்து அறிவு சார்ந்த போருக்கு நமது ராணுடையினர் தயாராக இருக்க வேண்டும். இங்கு படித்தால் தன்னம்பிக்கை, தைரியம், பொறுமை, விடாமுயற்சி மற்றும் பணிவு ஆகியவை உங்களை பலப்படுத்தும். தொழில்நுட்பம், முதன்மையான அணுகுமுறை, நவீன வளர்ச்சி இவை இருந்தால் சிறந்த வழி நடத்தும் அதிகாரிகளாக உருவெடுப்பர்கள். இது போன்று வர என்னுடைய வாழ்த்துக்கள்.


latest tamil news
சமீபத்திய காலம், மனிதகுலத்திற்கும் மிகவும் கடினமாக இருந்தது. கோவிட் -19 தொற்றுநோய் அனைத்து தரப்பு மக்களையும் பாதித்துள்ளது. பாரம்பரிய மற்றும் ஆன்லைன் கற்றலை திறம்பட பின்பற்றுவதன் மூலம் பாதுகாப்பு சேவைகளை கல்லூரி திட்டமிட்ட படிப்புகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளன. சமீபத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் உரையாடியதில், அவர்களின் உயர்ந்த மன உறுதி கடமைக்கான அர்ப்பணிப்பு மிகவும் மகிழ்ச்சியடைய செய்து, உங்களில் பெரும்பாலோர் இந்த சவால்களை கையாளும் முன்னணி வீரர்களாக இருந்திருக்கிறீர்கள். உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பை நாடு பாராட்டுகிறது. இவ்வாறு, ஜானதிபதி ராம்நாத் கோவிந்த் பேசினார்.

நிகழ்ச்சியில் பயிற்சி முடித்த முப்படைகளை சார்ந்த 3 அதிகாரிகள், வங்கதேச நாட்டைச் சார்ந்த அதிகாரி உட்பட 4 பேர் தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர்.


latest tamil news
ஜனாதிபதி மனைவி சவீதா கோவிந்த் கவர்னர் பன்வாரிலால் புரோஹித், மாநில தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி கமான்ட்டன்ட் காலூன் உட்பட பலர் பங்கேற்றனர். பயிற்சி கல்லூரி சார்பில் நினைவுப்பரிசை ஜனாதிபதி, தமிழக கவர்னர் மற்றும் அமைச்சருக்கு கமாண்டன்ட் காலுன் வழங்கி கவுரவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
05-ஆக-202105:19:50 IST Report Abuse
 Muruga Vel முதலில் சிம் கார்ட் இந்தியாவில் தயாரிக்கட்டும் ..ராஜ் குந்திரா தான் மேக் இந்த இந்தியா திட்டத்தை பின் பற்றினார் .
Rate this:
Cancel
04-ஆக-202120:16:16 IST Report Abuse
அப்புசாமி பாதுகாப்புக்கு ஒரு ஆயிரம் போலுசாவது போட்டிருந்தாங்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X