பொது செய்தி

தமிழ்நாடு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்பாட்டம்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
ராணிப்பேட்டை: பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி, முத்துக்கடையில் விவசாயிகள் ஆர்பாட்டம் நடத்தினர்.தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை முத்துக்கடையில் இன்று காலை ஆர்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மணி தலைமை வகித்தார். மாநில செயலாளர் உதயகுமார் தொடங்கி வைத்தார். மாநில போராட்டக்குழு தலைவர் ரகுபதி, வேலுார் மாவட்ட அமைப்பாளர் ராம்தாஸ்,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்பாட்டம்

ராணிப்பேட்டை: பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி, முத்துக்கடையில் விவசாயிகள் ஆர்பாட்டம் நடத்தினர்.

தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை முத்துக்கடையில் இன்று காலை ஆர்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மணி தலைமை வகித்தார். மாநில செயலாளர் உதயகுமார் தொடங்கி வைத்தார். மாநில போராட்டக்குழு தலைவர் ரகுபதி, வேலுார் மாவட்ட அமைப்பாளர் ராம்தாஸ், மாநில இளைஞர் அணி தலைவர் சுபாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதில், ராணிப்பேட்டை மாவட்டத்தில், வேளாண்மைத்துறை அதிகாரிகளால் பரிந்துரை செய்து விடுபட்ட இடங்களில் நேரடி நெல் கொள்முதல் திறக்க வேண்டும், நெல் குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாய் வழங்க வேண்டும், கொள்முதல் செய்யப்படும் நெல்களை உரிய நேரத்தில் கொண்டு செல்லாததால் அரசுக்கு இழப்பு ஏற்பட காரணமான ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நெல் சேமிப்பு கிடங்குகளை அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X