பொது செய்தி

தமிழ்நாடு

தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீடு: தமிழக அமைச்சரவை ஒப்புதல்

Updated : ஆக 04, 2021 | Added : ஆக 04, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை: அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கவும், அதற்காக நடப்பு சட்டசபை தொடரில் சட்ட முன் வடிவு தாக்கல் செய்யவும், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த ஆண்டுகளில் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம்,
தொழிற்கல்வி, படிப்பு, அரசுப்பள்ளி, மாணவர்கள், இட ஒதுக்கீடு, அமைச்சரவை, ஸ்டாலின், ஒப்புதல்,

சென்னை: அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கவும், அதற்காக நடப்பு சட்டசபை தொடரில் சட்ட முன் வடிவு தாக்கல் செய்யவும், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த ஆண்டுகளில் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைவாக இருந்தது. இதனால், அரசு பள்ளி மாணவர்கள் தொழிற்கல்வி படிப்பதற்கான தடையாக உள்ள காரணங்கள் என்ன என்பது குறித்து ஆய்வு செய்யவும், அவர்களின் சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதற்கும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை கண்டறிந்து உரிய தீர்வுகள், பரிந்துரைகளை செய்யவும் ஓய்வு பெற்ற டில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டு அறிக்கை பெறப்பட்டது.


latest tamil news


அந்த கமிஷன் பரிந்துரைகளை ஏற்று, அதனை செயல்படுத்தும் விதமாக, மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கியதை போல், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு ஏனைய தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கும் வகை செய்யும் சட்ட முன்வடிவை நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் அறிமுகம் செய்வது என, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shkumar - Bangalore,இந்தியா
04-ஆக-202121:35:42 IST Report Abuse
Shkumar தொழிற்படிப்பிற்குதான் நீட் இல்லாமல் சமூகநீதி ஏற்கனவே காப்பாற்றப்படுகிறதே. பிறகு எதற்கு இன்னும் இட ஒதுக்கீடு?
Rate this:
Cancel
Raj - Chennai ,இந்தியா
04-ஆக-202119:57:22 IST Report Abuse
Raj எப்படி பீகாரிகளுடன் போட்டி போட முடியும்
Rate this:
Cancel
S Vaidhinathan - Mannivakkam Chennai 600048,இந்தியா
04-ஆக-202119:12:17 IST Report Abuse
S Vaidhinathan Governments in tamilnadu are runsolely forpurposes relating toreservations and reservations alone. No other useful purpose is servedbythem.what a pity.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X