பொது செய்தி

இந்தியா

பழைய ரூபாய் நோட்டுகள் வாங்குவதாக மோசடி: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

Updated : ஆக 04, 2021 | Added : ஆக 04, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை வாங்குவோர் மற்றும் விற்பனை செய்வோர் குறித்து சலுகைகள், கமிஷன்களை நம்பி ஏமாற வேண்டாம் என இந்திய ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.சமீப காலங்களில் பழைய ரூபாய் நோட்டுகள், நாணயங்களை, கொடுத்தால் அதிகமான பணம் தருவதாக விளம்பரங்கள் வலம் வருகின்றன. அவ்விளம்பரங்களில் அவர்கள் குறிப்பிடும் எண்கள், குறியடூகளுடன் உள்ள
RBI,Reserve Bank,ரிசர்வ் வங்கி

புதுடில்லி: பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை வாங்குவோர் மற்றும் விற்பனை செய்வோர் குறித்து சலுகைகள், கமிஷன்களை நம்பி ஏமாற வேண்டாம் என இந்திய ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீப காலங்களில் பழைய ரூபாய் நோட்டுகள், நாணயங்களை, கொடுத்தால் அதிகமான பணம் தருவதாக விளம்பரங்கள் வலம் வருகின்றன. அவ்விளம்பரங்களில் அவர்கள் குறிப்பிடும் எண்கள், குறியடூகளுடன் உள்ள ரூபாய் நோட்டு மற்றும் நாணயங்களுக்கு கூடுதல் பணம் மற்றும் கமிஷன் தருவதாக கூறுகின்றனர்.


latest tamil news


இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், எந்தவொரு நிறுவனம் அல்லது நபர்களுக்கு இதுபோன்ற பழைய ரூபாய்கள், நாணயங்கள் வாங்குவதற்கும் விற்பதற்கும் பரிவர்த்தனை செய்வதற்கும் கட்டணம் மற்றும் கமிஷன் வசூல் செய்வதற்கும் யாருக்கும் அனுமதி வழங்கிவில்லை. வங்கிகளின் பெயரை இணைத்து வரும், இதுபோன்ற விளம்பரங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
05-ஆக-202105:52:00 IST Report Abuse
Mirthika Sathiamoorthi இன்னுமாடா இந்த பழைய நோட்டு இருக்கு 99% பழைய நோட்டுகள் வங்கிக்கு வந்திருச்சுன்னு சொன்னாங்களே..இந்த 5 வருசமா என்னங்கய்யா பண்ணிக்கிட்டு இருந்தீங்க? எதுக்கு இப்போ இந்த பழைய நோட்டு மோசடி? அப்போ கள்ளப்பணம் இன்னும் ஒழியலையா? வாழ்க பணமதிப்பிழப்பு..வரலாற்றில் குறிக்கப்படவேண்டிய உண்மைச்சம்பவம்.
Rate this:
Cancel
Tamilan - Kongu Nadu,இந்தியா
04-ஆக-202116:58:24 IST Report Abuse
Tamilan இனி தமிழகத்தில் மோசடிகள் நடக்கும்......என்ன செய்ய.......விதியே
Rate this:
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன்ஆமாம் SV சேகர் கூட தேர்தல் முடிந்ததும் சொன்னாரே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X