பொது செய்தி

இந்தியா

பயணத்தை தொடங்கியது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி கப்பல்

Updated : ஆக 04, 2021 | Added : ஆக 04, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
கொச்சி: நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைத்து, உருவாக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர் கப்பலான விக்ராந்த் தனது சோதனை ஓட்டத்தை அரபிக் கடலில் தொடங்கியது.இந்திய கடற்படைக்காக இப்போர் கப்பல், கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது. 262 மீட்டர் நீளம், 62 மீட்டர் அகலம், 25.6 மீட்டர் உயரம் கொண்ட இது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல்
பயணம்,இந்தியா,விமானம் தாங்கி கப்பல்,

கொச்சி: நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைத்து, உருவாக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர் கப்பலான விக்ராந்த் தனது சோதனை ஓட்டத்தை அரபிக் கடலில் தொடங்கியது.

இந்திய கடற்படைக்காக இப்போர் கப்பல், கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது. 262 மீட்டர் நீளம், 62 மீட்டர் அகலம், 25.6 மீட்டர் உயரம் கொண்ட இது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் போர் கப்பல் என்ற சிறப்பம்சம் பெற்றுள்ளது. கப்பலின் வடிவமைப்பு பணிகள் 1999-ல் தொடங்கியது. 2009-ல் கப்பலின் அடித்தளம் அமைக்கப்பட்டது. படிப்படியாக பணிகள் நிறைவடைந்து 2020 டிசம்பரில் அடிப்படை சோதனைகள் முடிவடைந்தன. இந்நிலையில் இன்று (ஆக., 04) தனது முதல் சோதனை ஓட்டத்தை அரபிக் கடலில் விக்ராந்த் துவங்கியது. பிரம்மாண்ட கப்பலின் சோதனைப் பயணம் நான்கு நாட்கள் நடைபெறும்.


latest tamil news




இது குறித்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ள கடற்படை செய்தித்தொடர்பாளர், “இதன் முன்னோடி விக்ராந்த், 1971 போர் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய 50-ம் ஆண்டில், அதன் மறுபிறப்பான இன்றைய விக்ராந்த் தனது முதல் சோதனை கடல் பயணத்தை இன்று தொடங்கியிருக்கிறது. இந்தியாவிற்கு பெருமை மிகுந்த மற்றும் வரலாற்று சிறப்புமிக்க நாள். இதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் கட்டப்பட்ட மிகப்பெரிய மற்றும் மிகவும் சிக்கலான போர்க்கப்பல்.” என குறிப்பிட்டுள்ளார்.



பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “உள்நாட்டு விமானம் தாங்கிக் கப்பல் விக்ராந்தின் முதல் கடல் பயணம், பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு இந்தியா திட்டம் மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் உண்மையான சாட்சி. கோவிட்டை கூட பொருட்படுத்தாத அனைத்து பங்குதாரர்களின் உண்மையான ஈடுபாட்டை இவ்வரலாற்று சிறப்புமிக்க சாதனை காட்டுகிறது. இந்தியாவுக்கு ஒரு பெருமையான தருணம்.” என கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-ஆக-202110:46:30 IST Report Abuse
பாமரன் முதலில் இதை வடிவமைத்த தேசிய பாதுகாப்பு துறை பொறியாளர்களுக்கும் கட்டிய கொச்சி ஷிப்யார்ட் கம்பெனிக்கும் வாழ்த்துக்கள்...💐 இங்கே வழக்கம் போல கூலிக்கு மாரடிக்கும் பகோடாஸ் விஷயம் புரியாமல் கூவியிருக்காங்க... நான் வாஜ்பாய் காலத்தில் இந்த ப்ராஜெக்டில் சிறிதளவு இன்வால்வ் ஆகியிருந்திருக்கிறேன்... உண்மையில் போற்றப்பட வேண்டிய சாதனை (கிட்டத்தட்ட அறுபது முதல் எழுவது சதவீதம் இம்போர்டட் மெட்டீரியல் யூஸ் பண்ணியிருந்தாலும்)... இதை ஏன் கம்மிகள் ஆளும் கேரளாவில் கட்டினார்கள் அதைவிட பெரிய கப்பல்கள் கட்டும் தளங்கள் மும்பை விசாகப்பட்டினம் கொல்கத்தா கோவா போன்ற இடங்களில் இருந்தும் அப்பிடிங்கறதுக்கு விடை தெரியாத கூலிப்படைங்க அது... நல்லவேளையாக மோடிதான் கட்டினாருன்னு இன்னும் ஒருத்தனும் கெளம்பி வரலை...🤭🤭 அந்த வரையில் சந்தோஷம்...😜
Rate this:
Cancel
Thamizhan - Doha,கத்தார்
05-ஆக-202109:05:16 IST Report Abuse
Thamizhan இதுதான் வளர்ச்சி, இதுதான் முன்னேற்றம்... அடப்பாவிகளா, சுமார் 65 வருஷமா நாட்டை முன்னேற்றாமையே விட்டுட்டீங்களேடா
Rate this:
Cancel
Begam - Coimbatore,மலேஷியா
05-ஆக-202108:26:51 IST Report Abuse
Begam பெருமையான தருணம். இந்தியா தயாரிப்புகள் மென்மேலும் பெருகிட இறைவன் அருள் புரியட்டும். உலகம் இந்தியாவை உற்று நோக்கும் நேரம். Great
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X