ஒரு லட்சம் புள்ளிகளால் வரைந்த எம்.எஸ். சுப்புலட்சுமி ஓவியம் அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு லட்சம் புள்ளிகளால் வரைந்த எம்.எஸ். சுப்புலட்சுமி ஓவியம் அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வை

Added : ஆக 04, 2021
Share
வேலுார்:ஒரு லட்சம் புள்ளிகளால் வரைந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி ஓவியத்தை வேலுார் அருங்காட்சியகத்தில் மக்கள் பார்த்தனர்.தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அருங்காட்சியகங்களில், அரிய வகை பொருட்களை ஒவ்வொரு மாதமும் மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என அத்துறை இயக்குனர் ராமன் உத்தரவிட்டார்.இதையடுத்து வேலுார் கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தில் ஒரு லட்சம் புள்ளிகளால்
 ஒரு லட்சம் புள்ளிகளால் வரைந்த எம்.எஸ். சுப்புலட்சுமி ஓவியம் அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வை

வேலுார்:ஒரு லட்சம் புள்ளிகளால் வரைந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி ஓவியத்தை வேலுார் அருங்காட்சியகத்தில் மக்கள் பார்த்தனர்.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அருங்காட்சியகங்களில், அரிய வகை பொருட்களை ஒவ்வொரு மாதமும் மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என அத்துறை இயக்குனர் ராமன் உத்தரவிட்டார்.இதையடுத்து வேலுார் கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தில் ஒரு லட்சம் புள்ளிகளால் வரையப்பட்ட கர்நாடகா இசைப்பாடகி பாரத ரத்னா விருது பெற்ற எம்.எஸ். சுப்புலட்சுமியின் ஓவியம் மக்கள் பார்வைக்காக இன்று வைக்கப்பட்டது. ஏராளமான மக்கள் இதனை பார்வையிட்டனர்.

இது குறித்து அருங்காட்சியக காப்பாட்சியாளர் சரவணன் கூறியதாவது: வேலுார் சத்துவாச்சாரியை சேர்ந்த கல்லுாரி மாணவி ராஜேஸ்வரி என்பவர் பேனாவில் ஒரு லட்சம் புள்ளிகளால் சுப்புலட்சுமியின் ஓவியத்தை வரைந்துள்ளார்.இந்த ஓவியம் வரும் 31ம் தேதி வரை மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். தொடர்ந்து இது வரை அருங்காட்சியகத்தில் வைக்கப்படாத தபால் தலைகள், நாணயங்கள் போன்றவை வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X