சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ்சில் டிக்கட் வாங்கும்படி கூறிய கண்டக்டரை தாக்கியவர் கைது

Added : ஆக 04, 2021
Share
Advertisement
வேலுார்:வேலுார் அரசு பஸ்சில் டிக்கட் வாங்கும்படி கூறிய கண்டக்டரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.வேலுார் மாவட்டம், வேலுார் டிடர்லைன் உசேன் பகுதியை சேர்ந்தவர் குமார், 56. இவர் வேலுார் கொணவட்டம் அரசு பஸ் டிப்போவில், காட்பாடி- பாகாயம் டவுன் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இன்று காலை 11:00 மணிக்கு அவர் பஸ்சில் பணியில் இருந்தார்.அப்போது வேலுார் கோட்டை முன் உள்ள

வேலுார்:வேலுார் அரசு பஸ்சில் டிக்கட் வாங்கும்படி கூறிய கண்டக்டரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

வேலுார் மாவட்டம், வேலுார் டிடர்லைன் உசேன் பகுதியை சேர்ந்தவர் குமார், 56. இவர் வேலுார் கொணவட்டம் அரசு பஸ் டிப்போவில், காட்பாடி- பாகாயம் டவுன் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இன்று காலை 11:00 மணிக்கு அவர் பஸ்சில் பணியில் இருந்தார்.அப்போது வேலுார் கோட்டை முன் உள்ள நிறுத்தத்தில் பஸ் நின்றது. அங்கு ஏறிய நபர் பாகாயம் செல்ல வேண்டும் என்றார். குமார் டிக்கட் வாக்கும்படி கூறியதற்கு மறுத்து தாக்கினார். இதில் காயமடைந்த குமார் வேலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

புகார்படி வேலுார் வடக்கு போலீசார் கண்டக்டரை தாக்கிய, நேதாஜி நகரை சேர்ந்த ஆனந்தனை, 30, கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X