பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் பழைய 'பெட்' திருடும் மர்ம நபர்கள் போலீசார் விசாரணை

Added : ஆக 04, 2021
Share
Advertisement
ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்துார் அரசு மருத்துவமனையில், உள் நோயாளிகளுக்கு, 200க்கும் மேற்பட்ட பெட் (படுக்கை) வசதிகள் உள்ளன. கொரோனா சிகிச்சை மையமாக உள்ளதால், தன்னார்வ அமைப்பு மூலம் புதிதாக படுக்கைகள் வழங்கினர்.இதனால், பல ஆண்டுகளாக பயன்படுத்திய பழுதான பெட் கட்டில்களை, மருத்துவமனையின் பின்புற பகுதியில் போட்டு வைத்துள்ளனர். இன்று, மதியம், 2:00 மணியளவில், கிளை நுாலகம் அருகில்,
 அரசு மருத்துவமனையில் பழைய 'பெட்' திருடும் மர்ம நபர்கள் போலீசார் விசாரணை

ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்துார் அரசு மருத்துவமனையில், உள் நோயாளிகளுக்கு, 200க்கும் மேற்பட்ட பெட் (படுக்கை) வசதிகள் உள்ளன. கொரோனா சிகிச்சை மையமாக உள்ளதால், தன்னார்வ அமைப்பு மூலம் புதிதாக படுக்கைகள் வழங்கினர்.

இதனால், பல ஆண்டுகளாக பயன்படுத்திய பழுதான பெட் கட்டில்களை, மருத்துவமனையின் பின்புற பகுதியில் போட்டு வைத்துள்ளனர். இன்று, மதியம், 2:00 மணியளவில், கிளை நுாலகம் அருகில், மருத்துவமனையின் பின்வழிப்பாதை பகுதியின் சுவர் மீது ஏறிய இருவர், பழைய பெட் கட்டிலை துாக்கி வந்தனர்.

அந்த கட்டிலை, அவர்கள் தலைச்சுமையாக துாக்கிச் சென்றுள்ளனர். அவ்வழியாக சென்ற சிலர், மர்ம நபர்கள் பட்டப்பகலில் பெட் கட்டில் திருடிச் செல்வதை புகைப்படம் எடுத்து, வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர்.தகவலறிந்த ஆத்துார் டவுன் போலீசார், ஆள் நடமாட்டம் குறைந்த பகுதியில், அரசு மருத்துமனையில் இருந்து பெட் கட்டில் திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X