சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஆக 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்: ஜெயலலிதா படத்திறப்பு விழாவில், தி.மு.க., பங்கேற்காததால், கருணாநிதி படத்திறப்பு விழாவை புறக்கணித்ததாக, அ.தி.மு.க.,வினர் தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா படத்திறப்பு விழாவுக்கு, அவர்கள் அழைப்பிதழை மட்டும் அனுப்பி வைத்தனர். நாங்கள் அவ்வாறு செய்யவில்லை.'டவுட்' தனபாலு: உங்கள், 'பஞ்சாயத்து' எந்த காலத்திலும் தீராது. இருதரப்பு எதிர்ப்பு


'டவுட்' தனபாலு

தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்: ஜெயலலிதா படத்திறப்பு விழாவில், தி.மு.க., பங்கேற்காததால், கருணாநிதி படத்திறப்பு விழாவை புறக்கணித்ததாக, அ.தி.மு.க.,வினர் தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா படத்திறப்பு விழாவுக்கு, அவர்கள் அழைப்பிதழை மட்டும் அனுப்பி வைத்தனர். நாங்கள் அவ்வாறு செய்யவில்லை.

'டவுட்' தனபாலு: உங்கள், 'பஞ்சாயத்து' எந்த காலத்திலும் தீராது. இருதரப்பு எதிர்ப்பு என்ற வகையில் தான், இவ்விரு கட்சிகளின் அடித்தளமே அமைக்கப்பட்டுள்ளது. தி.மு.க.,வுக்கு எதிராக, அ.தி.மு.க., உருவானதால், எல்லா பிரச்னைகளிலும் எதிரெதிர் துருவங்களாக இருக்கின்றன. இப்படித் தான் வரும் காலங்களிலும் இருக்கும் என்பதிலும் யாருக்கும், 'டவுட்'டே கிடையாது!


பால்வளத் துறை அமைச்சர் நாசர்:
மத்தியில் ஆளும் பா.ஜ.,வின் ஏழு ஆண்டுகள் ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பல்வேறு சோதனைகள், கஷ்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன் விளைவு தான், அ.தி.மு.க., ஆட்சி முடிவுக்கு வந்தது. கடந்த ஆட்சி காலத்தில் கிறிஸ்துவர்களின் வலிமையான ஜெபத்தால் தான், இன்று, மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க., ஆட்சிக்கு வந்துள்ளது.

'டவுட்' தனபாலு: அந்த ஏழு ஆண்டுகளில், சிறுபான்மையினருக்கு ஒன்று என்றால் தான், தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சியினரும் பொறுத்துக் கொள்ள மாட்டார்களே... எனவே, நீங்கள் சொல்வது, அரசியல் ரீதியிலான, 'ஐஸ்' என்பதில், சிறுபான்மையினருக்கே, 'டவுட்' இன்றி தெரியும். அதுபோல, ஜெபத்தால் தான், தி.மு.க., ஆட்சிக்கு வந்தது என்பது தான் மிகப்பெரிய 'ஜோக்!'


அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்:
சமூக நீதி என்றால், அ.தி.மு.க., தான். இதில், தி.மு.க., சிறு துரும்பைக் கூட எடுத்து போடாத நிலையில், நாங்கள் கொண்டு வந்த, 27 சதவீதம் மற்றும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை சொந்தம் கொண்டாடுகிறது. மக்களை திசை திருப்பி ஏமாற்றுவதில், தி.மு.க.,வினர் புத்திசாலிகள்.

'டவுட்' தனபாலு: இட ஒதுக்கீடு இருக்கிறது என்று கூறி, தமிழக மாணவர்களை படிக்க விடாமல் கெடுத்து, மூளையை மழுங்கச் செய்தது யார் என்று தராசில் வைத்து நிறுத்துப் பார்த்தால், அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் சரி சமமாக இருக்கும். மேலும், நீங்கள் சொல்வது போல, தங்களுக்கு சாதகமாக திசை திருப்புவதில், தி.மு.க.,வினர் புத்திசாலிகள் என்பதிலும், 'டவுட்'டே வராது!

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
05-ஆக-202106:01:39 IST Report Abuse
D.Ambujavalli 'ஒதுக்கீட்டில்' வந்த பலரும் ஏழைப்பட்ட, பின்தங்கிய குடும்பத்திலிருந்து வரவில்லை. பலரும் பெரிய பதவிகளை பிடித்தவர்கள், முன்னிலையில் வந்தவர்கள்தான் இன்னும் அதே சலுகையைக்கூறி இரண்டு தலைமுறைகளாக, நல்ல அறிவுபூர்வமான மாணவர்கள், அதிகாரிகளையே மாநிலம் இழந்துள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X