சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

ஒரு செங்கல்லை கூட எடுக்க முடியாது!

Added : ஆக 04, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஒரு செங்கல்லை கூட எடுக்க முடியாது!ஆர்.சுப்பு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் 40 ஆயிரம் ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. ஏற்கனவே உள்ள 75 வழிகாட்டுதல்களை பயன்படுத்தி அறநிலைய துறை, அந்த நிலங்களை மீட்க வேண்டும் என, உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.கோவில் நிலம் தவிர, அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்நிலை, நடைபாதை


ஒரு செங்கல்லை கூட எடுக்க முடியாது!ஆர்.சுப்பு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் 40 ஆயிரம் ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. ஏற்கனவே உள்ள 75 வழிகாட்டுதல்களை பயன்படுத்தி அறநிலைய துறை, அந்த நிலங்களை மீட்க வேண்டும் என, உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.
கோவில் நிலம் தவிர, அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்நிலை, நடைபாதை ஆகியவற்றிலும் கூட ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் அரசியல்வாதிகள் தான்!
ஒரு இடத்தை ஆக்கிரமிப்பதற்கு தேவையானவை, ஒரு கோணி மற்றும் நான்கு ஆணிகள் ஆகியவை தான். அந்த இடத்திற்கு சில ஆண்டுகளில் அரசே பட்டா போட்டு, ஆக்கிரமிப்பாளருக்கு கொடுத்து விடும்.இதனால் ஆக்கிரமிப்புகளை தடுக்கவும் முடியவில்லை; ஒழிக்கவும் முடியவில்லை.
ஆக்கிரமிப்புகளை அகற்ற, நீதிமன்றம் பிறப்பிக்கும் கடுமையான உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வேண்டிய அரசு, அதை கண்டுகொள்வதில்லை.
தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், போக்குவரத்துக்கு இடையூறாக ஏராளமான கடைகள் உள்ளன.அதை அகற்ற, மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன் தலைமையில் அதிகாரிகள் சென்ற போது, தி.மு.க., - எம்.எல்.ஏ., நீலமேகம் எதிர்ப்பு தெரிவித்து, அந்த பணியை தடுத்தார்.இரண்டாவது நாள், மாநகராட்சி கமிஷனர் சரவணகுமார் நேரடியாக களம் இறங்கி, 'பொக்லைன்' இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றார்.
மாநகர துணை செயலர் நீலகண்டன் உள்ளிட்ட தி.மு.க.,வினர் திரண்டு வந்து, ஆக்கிரமிப்பை அகற்றும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, கமிஷனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கமிஷனரும், ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாமல் தோல்வியை தழுவி திரும்பி சென்றார்.புயல், பூகம்பம் போன்ற இயற்கை பேரிடர் ஏற்பட்டு, அந்த ஆக்கிரமிப்புகள் சரிந்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.
ஆளுங்கட்சியின் ஆதரவோடு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து, மாநகராட்சி நிர்வாகத்தாலோ, உயர் நீதிமன்ற உத்தரவுகளாலோ ஒரு செங்கல்லை கூட எடுக்க முடியாது என்பது தான் நிதர்சனம்!

இட ஒதுக்கீட்டுக்குதடை?

சுந்தாசா, கும்பகோணத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படாது' என, மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.கடந்த 1931ம் ஆண்டுக்கு பின், நம் நாட்டில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இட ஒதுக்கீடு அனைத்தும், 1931ல் ஆங்கிலேயர் காலத்தில் எடுக்கப்பட்ட ஜாதி கணக்கீட்டை
அடிப்படையாக வைத்தே இன்று வரை வழங்கப்படுகிறது.மக்கள் தொகை வளர்ச்சியின் அளவில், அந்தந்த ஜாதியினரின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது என்ற அனுமானத்தின் அடிப்படையில், இட ஒதுக்கீடு அளவு நிர்ணயிக்கப்படுகிறது.ஒவ்வொரு மாநிலத்திலும் இட ஒதுக்கீட்டை முன்வைத்து, மோசமான அரசியல் நடக்கிறது. இதனால் ஜாதிகள் ஒழிவதில்லை; ஜாதி உணர்வு துாண்டப்படுகிறது.
'இட ஒதுக்கீடு என்பது பிற்படுத்தப்பட்டோர் முன்னேறி, மற்ற குடிமக்களுடன் சம நடை போட ஏற்படுத்தப்பட்ட ஒன்று. பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறியோர் அந்த சலுகைகளை அனுபவிப்பது சரியல்ல' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.மற்றொரு வழக்கில், 'இன்னமும் எத்தனை தலைமுறைகளுக்கு தான் இட ஒதுக்கீடு தொடர்ந்து நடைமுறையில்
இருக்கும்?' என, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த அமைக்கப்பட்ட கமிஷன்களின் முடிவு தெளிவாக இல்லை. எனவே, 2021ல் நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதியும் இணைக்கப்பட வேண்டும் என, பல மாநிலங்களின் சட்டசபையில் தீர்மானம் நிறைவேறி உள்ளன.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கொள்கை முடிவால், மாநிலங்களின் ஜாதி வாரி கணக்கெடுப்பு கோரிக்கைக்கு
முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் 27 சதவீத ஓ.பி.சி., இட ஒதுக்கீடும் இதனால் கேள்விக்குறியாகிறது.தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படை, இன்று வரை விளக்கப்படவில்லை. இந்நிலையில், ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க, ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது; அது எப்படி செயல்படும் என்பதும் விளக்கப்படவில்லை.
ஜாதி வாரி கணக்கெடுப்பிற்கு எதிராக மத்திய அரசின் கொள்கை முடிவு இருப்பதால், இட ஒதுக்கீடு முறைக்கு தடை விதிக்க வேண்டும்.


புது வகைமிரட்டல் இது!கோ.வெங்கடேசன், திருநின்றவூர், திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெஹுல் சோக்சி ஆகியோர் வங்கி மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டில் தஞ்சம் புகுந்து உள்ளனர்.விஜய் மல்லையா, நிரவ் மோடி ஆகியோர் லண்டனில் உள்ளனர். மெஹுல் சோக்சி, ஆன்டிகுவா தப்பி சென்றார். அங்கிருந்து கியூபாவிற்கு தப்ப முயன்ற போது டொமினிக்காவில் பிடிபட்டு சிறையில் உள்ளார்.நிரவ் மோடி, தற்போது லண்டன் சிறையில் உள்ளார். அவரை இந்தியாவிற்கு அழைத்து வர மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.இது தொடர்பான வழக்கில், 'இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால், நிரவ் மோடி மன உளைச்சலால் தற்கொலை செய்து கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது' என, லண்டன் நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் தெரிவித்து உள்ளார்.ஏமாற்றும் நோக்கத்துடன் வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை கடனாக பெறும் போது மட்டும் அவருக்கு மன உளைச்சல் வரவில்லை.இனி இதே போன்ற வாதத்தை விஜய் மல்லையா, மெஹுல் சோக்சி போன்றோரும் முன் வைக்கலாம்; யார் கண்டது?வங்கியை ஏமாற்றுவோர், ஊழல் அரசியல்வாதி, லஞ்சத்தில் திளைக்கும் அரசு அதிகாரிகள் யாவரும் இவ்வகை மிரட்டலை கையாளலாம்.
'தற்கொலை செய்து கொள்வேன்' என மிரட்டி சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க வழி இருக்கிறது என்பதே விசித்திரமாக இருக்கிறது.இதுபோன்ற வாதங்கள், நீதி துறையில் தவறான முன் உதாரணமாகி விடக் கூடாது என்பதே நம் கவலை.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R VENKATARAMANAN - Chennai,இந்தியா
05-ஆக-202111:48:11 IST Report Abuse
R VENKATARAMANAN கருப்பு பணம் மற்றும் லஞ்சம் இரண்டையும் ஒழிக்கவேண்டும் . அதற்கு இவைகளுக்கு அடிமை ஆகாத தலைவன் மற்றும் அவனது சகாக்கள் இருக்கவேண்டும். தவறு சிறியதாக இருந்தாலும் உடனடியாக மிக அதிக பட்சமான தண்டனை கொடுக்கப்படவேண்டும். தவறான வழியில் சேர்த்த சொத்துக்களை அரசுடமை ஆக்கவேண்டும். பிடிபட்டவன் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டினால் சாக்கடடும் என்று விட்டுவிடவேண்டும். அவன் மீதோ அல்லது அவன் குடும்பத்தார் மீதோ எள்ளளவும் இரக்கம் காண்ப்பிக்கக்கூடாது. நடைமுறையில் எந்த அரசியல் வாதியும் யோக்கின் இல்லை. இவன் அவன் மீதும் அவன் எவன் மீதும் குற்றம் சொல்லிக் கொண்டு அவனவன் தன் சம்பாத்தியத்தை செய்துகொண்டுதான் இருக்கிறான். அரசியல் வாதியாக இருந்தால் அவனை நிரந்தரமாக எதற்கும் போட்டியிட தகுதி இல்லாதவனாக அறிவிக்கப்பவேண்டும். உத்தியோகஸ்த்தனாக இருந்தால் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். அவனது ஓய்ஊதிய பலன்களையும் நிறுத்தவேண்டும். அவன் செய்த தவறுக்கு கூலி வேலை செய்து தன்னையும் தன்குடும்பத்தையும் காப்பாறிக் கொள்ளவேண்டும்.. ஒன்று இரண்டு பேர்களுக்கு அப்படி நடந்து அதை மற்ற அரசியல் வாதிகள், உத்தியோ கஸ்த்தர்கள் பார்க்க /கேட்க மற்றவர்களுக்கு மனதில் ஒரு பயம் ஏற்பட வாய்ப்பு ஆகும். அவ்வாறு நடவடிக்கை எடுக்க மனஉறுதியும் நேர்மையும் இருக்கவேண்டும்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
05-ஆக-202106:11:46 IST Report Abuse
D.Ambujavalli இதே 'பாணியை' பின்பற்றி, நம் ஊர் குட்கா, லஞ்சம், கமிஷன் பேர்வழிகளெல்லாம் பிளாக் மெயில் செய்து தப்பிக்கலாம் நல்ல வாதம், நல்ல முன்னுதாரணம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X