சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

அதிகாரிகளை எச்சரித்த அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,

Added : ஆக 04, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
அதிகாரிகளை எச்சரித்த அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,''துறைகளை பிரிச்சவங்க, அதிகாரிகளை நியமிக்காம இருக்காங்க...'' என, ஏலக்காய் டீயை உறிஞ்சியபடியே விவாதத்தை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.''எந்த துறையில வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''பொதுப்பணித் துறையில இருந்து நீர்வளத் துறையை தனியா பிரிச்சு, துரைமுருகனுக்கு குடுத்தாங்கல்ல... பொதுப்பணித் துறைக்கு தனிச் செயலரை உடனே

டீ கடை பெஞ்ச்


அதிகாரிகளை எச்சரித்த அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,


''துறைகளை பிரிச்சவங்க, அதிகாரிகளை நியமிக்காம இருக்காங்க...'' என, ஏலக்காய் டீயை உறிஞ்சியபடியே விவாதத்தை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.

''எந்த துறையில வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''பொதுப்பணித் துறையில இருந்து நீர்வளத் துறையை தனியா பிரிச்சு, துரைமுருகனுக்கு குடுத்தாங்கல்ல... பொதுப்பணித் துறைக்கு தனிச் செயலரை உடனே நியமிச்சிட்டாங்க... ஆனா, நீர்வளத் துறைக்கு இன்னும் தனியா செயலர் நியமிக்கலை...

''பொதுப்பணித் துறையில இருந்து நீர்வளத்துறைக்கு மாற விருப்பம் இருக்கிற அதிகாரிகளிடம் விண்ணப்பங்கள் வாங்குனாங்க...

''ஆனாலும், இன்னும் காலியா இருக்கிற உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் பணியிடங்களை நிரப்பலை... 'ரெண்டு துறைகளும் தனியா இயங்கக் கூடிய அளவுக்கு நிர்வாகத்தை சீர் செய்யணும்'னு கோட்டை வட்டாரங்கள்ல பேசிக்கிறாங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''அரசு பணிக்கு டிமிக்கி குடுத்துடுதாரு வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறிய அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''தஞ்சாவூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியில நிர்வாகியா இருக்கிறவர், மின் வாரியத்துலயும் அதிகாரியா இருக்காரு... இவர், கொரோனா தன்னார்வலர்களுக்கு வழங்க வேண்டிய அடையாள அட்டையை, சட்டவிரோத செயல்கள்ல ஈடுபடுறவங்களுக்கு குடுத்திருக்காரு வே...

''அதே மாதிரி சொசைட்டி சார்புல நடத்துற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு முக கவசங்கள், சானிடைசர் வழங்குறப்ப, பொதுமக்களிடமே பணம் வாங்கிடுதாரு... யாராவது தட்டிக் கேட்டா, 'கலெக்டரே நான் சொல்றதைத் தான் கேட்பாரு'ன்னு மிரட்டுதாரு வே...

''மின்வாரிய வேலைக்கு போகாம, 'டிமிக்கி' குடுத்துட்டு அரசு நிகழ்ச்சிகளை நடத்தினேன்னு கணக்கு காட்டிட்டு இருக்காரு... இவரைப் பத்தி, கலெக்டருக்கும் புகார்கள் போயிருக்கு வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.

''முத்துகுமார் உம்ம தம்பி ஊருக்கு போயிட்டாரா...'' என, நண்பரிடம் விசாரித்தபடியே, ''கொடுத்த பணத்தை திரும்ப வாங்கி, திரும்பவும் குடுத்தாங்க பா...'' என, கடைசி தகவலுக்கு வந்தார் அன்வர்பாய்.

''குழப்பாம தெளிவா சொல்லும் ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''கோவை கலெக்டர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை மதிக்காம, உட்கார்ந்தபடியே மனு வாங்கினது, சர்ச்சையானதே... வால்பாறையில சமீபத்துல கரடி தாக்கி ஒரு தொழிலாளி இறந்துட்டாரு பா...

''அவருக்கு வனத்துறை சார்புல நிவாரண தொகை குடுத்தாங்க... ஆனா, தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமியை அழைக்காமலே தொகையை குடுத்துட்டாங்க பா...

''இதனால, எம்.எல்.ஏ.,வின் ஆதரவாளர்கள், அதிகாரிகளிடம் சண்டைக்கு போயிட்டாங்க... வேற வழியில்லாம, அந்த குடும்பத்துக்கு குடுத்த பணத்தை திரும்ப வாங்கிய அதிகாரிகள், எம்.எல்.ஏ., கையால மறுபடியும் கொடுத்து, போட்டோவுக்கு போஸ்
குடுத்தாங்க...

''அப்புறமா, 'யார் ஆட்சி நடந்தாலும், இந்த தொகுதியில என்னை கூப்பிடாம எதுவும் செய்யக் கூடாது'ன்னு, அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ., எச்சரிக்கை செய்துட்டு போயிட்டாரு பா...'' என்றார் அன்வர்பாய்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
05-ஆக-202114:50:51 IST Report Abuse
r.sundaram இதுக்கு ஒரே விளக்கு கமிசன் மட்டும்தான். அதுக்கு பக்கத்திலேயே யாரும் வரக்கூடாது.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
05-ஆக-202106:06:26 IST Report Abuse
D.Ambujavalli இந்த அரசியல்வாதிகளின் அல்பத்தனத்துக்கு அளவே இல்லை அவர் என்ன கைப்பணத்தையா கொடுத்தார்? விளம்பரம் ஒன்றுதான் அவர்களின் குறி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X