பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஆக 04, 2021
Share
Advertisement
ஆக., 5, 1927துாத்துக்குடியில், கிறிஸ்துவ குடும்பத்தில், 1927 ஆக., 5ம் தேதி பிறந்தவர் சந்திரபாபு. இயற்பெயர் ஜோசப் பிச்சை. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதால், சந்திரபாபுவின் தந்தை சிறைவாசம் அனுபவித்தார். அவரது குடும்பம், இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டது.சந்திரபாபு, கொழும்புவில் உள்ள கல்லுாரிகளில் பயின்றார். ஆங்கிலேய நாகரிகத்தால் ஈர்க்கப்பட்டார். 1943ல், இவரது குடும்பம்

இதே நாளில் அன்று


ஆக., 5, 1927



துாத்துக்குடியில், கிறிஸ்துவ குடும்பத்தில், 1927 ஆக., 5ம் தேதி பிறந்தவர் சந்திரபாபு. இயற்பெயர் ஜோசப் பிச்சை. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதால், சந்திரபாபுவின் தந்தை சிறைவாசம் அனுபவித்தார். அவரது குடும்பம், இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டது.சந்திரபாபு, கொழும்புவில் உள்ள கல்லுாரிகளில் பயின்றார். ஆங்கிலேய நாகரிகத்தால் ஈர்க்கப்பட்டார். 1943ல், இவரது குடும்பம் தாயகம் திரும்பி, சென்னையில் குடியேறியது.
சினிமாவில் நுழைய முயன்ற சந்திரபாபு, வாய்ப்பு கிடைக்காததால் தற்கொலைக்கு முயன்றார். 1947ல், வெளியான தன அமராவதி எனும் படத்தில் அறிமுகமானார்.விரைவிலேயே, முன்னணி நகைச்சுவை நடிகரானார். தனக்கென பிரத்யேக பாணியை கையாண்டு, பெரும் ரசிகர் வட்டத்தை பெற்றார். அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்தார். இவரின் பாடல்கள், இன்றும் பிரபலமாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
கிருஷ்ணகிரியில், தேவாலயம் அமைப்பதற்காக, கலை நிகழ்ச்சிகள் நடத்தி பெரும் தொகையை திரட்டி கொடுத்தார். சொந்த படம் தயாரித்து, நஷ்டத்தில் மூழ்கியதால், போதைக்கு அடிமையானார். 1974 மார்ச் 8ம் தேதி, 46வது வயதில் காலமானார்.நடிகர் சந்திரபாபு பிறந்த தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X