கிருஷ்ணா நதி நீர் பங்கீடு வழக்கு: தலைமை நீதிபதி விலகல்

Updated : ஆக 04, 2021 | Added : ஆக 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: கிருஷ்ணா நதி நீர் பங்கீடு பிரச்னையை மத்தியஸ்தம் வாயிலாக தீர்த்துக் கொள்ள, ஆந்திர அரசு மறுப்பு தெரிவித்ததை அடுத்து, வழக்கு விசாரணையில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா விலகிக் கொண்டார்.கடந்த 2014ல், ஆந்திராவில் இருந்து தனி மாநிலமாக தெலுங்கானா பிரிக்கப்பட்டது. இந்த இரு மாநிலங்கள் இடையே ஓடும் கிருஷ்ணா நதியின் குறுக்கே ஆறு அணைகள் உள்ளன.இவற்றில்
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு, நீதிபதி ரமணா  விலகல்

புதுடில்லி: கிருஷ்ணா நதி நீர் பங்கீடு பிரச்னையை மத்தியஸ்தம் வாயிலாக தீர்த்துக் கொள்ள, ஆந்திர அரசு மறுப்பு தெரிவித்ததை அடுத்து, வழக்கு விசாரணையில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா விலகிக் கொண்டார்.

கடந்த 2014ல், ஆந்திராவில் இருந்து தனி மாநிலமாக தெலுங்கானா பிரிக்கப்பட்டது. இந்த இரு மாநிலங்கள் இடையே ஓடும் கிருஷ்ணா நதியின் குறுக்கே ஆறு அணைகள் உள்ளன.இவற்றில் இருந்து தண்ணீரை பிரித்துக் கொள்வதில் ஆந்திரா - தெலுங்கானா இடையே மோதல் ஏற்பட்டது.இதையடுத்து கிருஷ்ணா நதி மேலாண்மை வாரியம் உருவாக்கப்பட்டு, இரு மாநிலங்களுக்கும் தண்ணீர் பகிர்ந்து அளிக்கப்பட்டது.


latest tamil news



ஆனால், வாரியம் நிர்ணயித்த அளவை விட அதிக நீரை தெலுங்கானா பயன்படுத்துவதாக ஆந்திர அரசு குற்றஞ்சாட்டியது.இதையடுத்து, முக்கிய அணைகளான ஸ்ரீசைலம், நாகார்ஜுன சாகர் மற்றும் புலிசின்தலா அணைகளை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள கோரி, உச்ச நீதிமன்றத்தில் ஆந்திர அரசு மனு தாக்கல் செய்தது.
இந்த மனு சமீபத்தில் விசாரணைக்கு எடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு இந்த வழக்கை மத்தியஸ்தம் வாயிலாக தீர்த்துக் கொள்ள பரிந்துரைப்பதாக தெரிவித்தார். இதனை ஆந்திரா ஏற்றுக்கொள்ளவில்லை. வழக்கில் இருந்து விலகிக் கொள்ள விரும்புவதாக தலைமை நீதிபதி ரமணா தெரிவித்தார்.

இன்று (ஆக.04) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்தியஸ்தம் வாயிலாக தீர்த்துக்கொள்ள முடியாது என ஆந்திர அரசு தெரிவித்தது. இதையடுத்து, தலைமை நீதிபதி என்.வி.ரமணா வழக்கு விசாரணையில் இருந்து விலகிக் கொண்டார். வேறு ஒரு அமர்வுக்கு வழக்கை மாற்ற உத்தரவிட்டார்.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா
05-ஆக-202110:03:00 IST Report Abuse
JAYACHANDRAN RAMAKRISHNAN இதே போன்று காவரி, முல்லை பெரியாறு அணைகளை மத்திய அரசு எடுத்துக்கொண்டால் தமிழகம்-கர்நாடகா/ தமிழகம்-கேரளா இடையேயான தகராறு தீரும். நாடு முழுவதும் நதிகளை தேசிய மையம் ஆக்கினால் நதி நீர் பங்கீடு தகராறுகள் நாடு முழுவதும் தீரும். நீரினை மாநில பட்டியலில் இருந்து தேசிய பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X