போக்சோ சட்டத்தை ராகுல் மீறியதாக குழந்தை உரிமைகள் ஆணையம் குற்றச்சாட்டு!

Updated : ஆக 04, 2021 | Added : ஆக 04, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
புது டில்லி: டில்லியில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதாக கூறப்படும் 9 வயது தலித் சிறுமியின் பெற்றோரை சந்தித்த புகைப்படத்தை ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்டிருந்தார். அது சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்துவதாகவும், அதனை நீக்குமாறு கூறி டுவிட்டர் நிறுவனத்திடம் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 1 அன்று

புது டில்லி: டில்லியில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதாக கூறப்படும் 9 வயது தலித் சிறுமியின் பெற்றோரை சந்தித்த புகைப்படத்தை ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்டிருந்தார். அது சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்துவதாகவும், அதனை நீக்குமாறு கூறி டுவிட்டர் நிறுவனத்திடம் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தியுள்ளது.



latest tamil news



கடந்த ஆகஸ்ட் 1 அன்று தென் மேற்கு டில்லியின் கன்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி வீட்டிற்கு அருகில் உள்ள இடுகாட்டிற்கு குடிநீர் எடுத்து வரச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இடுகாட்டிலிருந்த பூசாரி ராதேஷ்யாம் மற்றும் மூவர் சிறுமியின் தாயாரை அழைத்து அவர் மின்சாரம் தாக்கி இறந்துவிட்டதாக உடலை காட்டியுள்ளனர்.

போலீசாருக்கு தகவல் தர வேண்டாம் எனக் கூறி உடலை அவர்களே எரியூட்டி உள்ளனர். சந்தேகமடைந்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகாரளித்தனர். இடுகாட்டிலிருந்த நால்வரும் கைது செய்யப்பட்டனர். சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அது தொடர்பாக நால்வரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த உள்ளனர்.

இந்நிலையில் காங்., எம்.பி., ராகுல் காந்தி இன்று (ஆக., 04) உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்தார். பின்னர் அது தொடர்பான படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு “அவருடைய பெற்றோரின் கண்ணீர் ஒன்றே ஒன்றை தான் சொல்கிறது. அவர்களது மகளுக்கு, இந்த நாட்டின் மகளுக்கு நீதி வேண்டும் என்பது தான் அது. நீதிக்கான பாதையில் நான் அவர்களுடன் இருப்பேன்.” என குறிப்பிட்டிருந்தார்.


latest tamil news



இது தொடர்பாக தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் டுவிட்டர் இந்தியா அதிகாரிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் அவரது பெற்றோரின் புகைப்படத்தை டுவீட் செய்வது போக்சோ சட்ட மீறல் ஆகும். ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி அப்பதிவை நீக்குமாறு அதில் கேட்டுக்கொண்டது. டில்லி முதல்வர் கெஜ்ரிவாலும் சிறுமியின் தாயாரை சந்தித்திருந்தார். அவரது கட்சி வெளியிட்ட புகைப்படத்தில் சிறுமியின் தாயார் முகம் மறைக்கப்பட்டிருந்தது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
05-ஆக-202113:23:28 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் மற்றவர்களின் துக்கம், பாதிப்பு இவனுக்கு அரசியல் என்னவொரு கேவலமான பிறவி ? இவனை ஆதரிக்கும் வாசகர்கள் எப்படிப்பட்டவர்கள் ?
Rate this:
Cancel
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா
05-ஆக-202110:11:33 IST Report Abuse
JAYACHANDRAN RAMAKRISHNAN காங்கிரஸ் மற்றும் திமுக இரண்டு கட்சிகளுக்கும் இந்த பாலியில் பலாத்காரம் செய்தி கிடைத்தாலே போதும் லட்டு சாப்பிட்ட மாதிரி. பாதிக்கபட்டவர்களுக்கு உதவி செய்வது போல் போஸ் கொடுத்து வீடியோ போட்டோ வெளியிட்டு அரசியல் லாபம் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். தமிழகத்தில் ஒரு வாரப்பத்திரிக்கை youtubeல் வீடியோ வெளியிட்டு காசு பார்க்கும். மனித நேய மற்ற பச்சோந்தி கூட்டங்கள். இவர்கள் தான் சமுக நீதி பற்றி வாய் கிழிய பேசுபவர்கள்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
05-ஆக-202107:55:19 IST Report Abuse
Kasimani Baskaran பிண அரசியல் செய்வதற்கு இவர்களுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X