பொது செய்தி

தமிழ்நாடு

கர்நாடகா காவிரி நீர் நிலுவை 4.74 டி.எம்.சி.,யாக சரிவு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
சென்னை:கர்நாடகாவின் காவிரி நீர் நிலுவை, 4.74 டி.எம்.சி.,யாக குறைந்துள்ளதால், நீர்வளத் துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடகா அணைகளில் இருந்து திறக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. இதன்படி, ஜூன் மாதம், 9.19 டி.எம்.சி., நீரை கர்நாடகா வழங்க வேண்டும். ஆனால்,

சென்னை:கர்நாடகாவின் காவிரி நீர் நிலுவை, 4.74 டி.எம்.சி.,யாக குறைந்துள்ளதால், நீர்வளத் துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.

தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடகா அணைகளில் இருந்து திறக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. இதன்படி, ஜூன் மாதம், 9.19 டி.எம்.சி., நீரை கர்நாடகா வழங்க வேண்டும். ஆனால், அணைகளில் போதிய நீர் இல்லை எனக் கூறி, 7.66 டி.எம்.சி., மட்டுமே கர்நாடகா வழங்கியது.

ஜூலை மாதம், 31.24 டி.எம்.சி.,க்கு பதிலாக, 27.9 டி.எம்.சி., மட்டுமே திறக்கப்பட்டது. இந்த இரண்டு மாதங்களிலும் சேர்த்து, 40.4 டி.எம்.சி.,க்கு பதிலாக, 35.6 டி.எம்.சி., மட்டுமே, தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ஜூலை 26ம் தேதி நிலவரப்படி, கர்நாடகா 13.4 டி.எம்.சி., நீரை, நிலுவை வைத்திருந்தது. தொடர்ந்து பெய்த மழையால், அங்குள்ள அணைகளில் இருந்து அதிகளவு நீர் திறக்கப்பட்டது.

இதனால், தற்போது கர்நாடகாவின் காவிரி நீர் நிலுவை, 4.74 டி.எம்.சி.,யாக சரிந்துள்ளது. ஆக., மாதம், 45.95 டி.எம்.சி., நீரை கர்நாடகா வழங்க வேண்டும். அங்குள்ள அணைகள் கிட்டத்தட்ட நிரம்பும் தருவாயில் இருப்பதால், அடுத்த மழையில் தமிழகத்திற்கு கூடுதல் நீர் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால், ஆக., மாதம் முடிவதற்குள் நிலுவை நீர் முழுமையாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில், தமிழக நீர்வளத் துறையினர் உள்ளனர்.


நிரம்புவது எப்போது?

தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில், மாநிலம் முழுதும் 90 அணைகள் உள்ளன. தென்மேற்கு பருவமழை காலங்களில், இந்த அணைகளுக்கு நீர்வரத்து கிடைப்பது வழக்கம். கடந்தாண்டு, இதே நாளில் பெரும்பாலான அணைகள் நிரம்பி விட்டன. அவற்றில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

தற்போது, பெரிய அணைகளில் பவானிசாகர், முல்லைப் பெரியாறு, வைகை, சோலையாறு, பரம்பிக்குளம் ஆழியாறு உள்ளிட்டவை மட்டுமே, நிரம்பும் கட்டத்தில் உள்ளன. சிறிய அணைகள், 90 சதவீதம் இன்னும் நிரம்பவில்லை.தமிழகம், கர்நாடகா, கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அடுத்த சுற்று மழையில் பெரும்பாலான அணைகள் நிரம்பும் என்ற நம்பிக்கையில், நீர்வளத்துறையினர் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X