பொது செய்தி

தமிழ்நாடு

வில்லங்க சான்றுக்கு கமிஷன் பதிவுத்துறை மீது மக்கள் புகார்

Added : ஆக 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:'ஆன்லைன்' முறையில் வில்லங்க சான்று கோரி விண்ணப்பிப்போரிடம், சார் - பதிவக பணியாளர்கள், கமிஷன் கேட்டு மறைமுகமாக நிர்ப்பந்தம் செய்வதாக புகார் எழுந்து உள்ளது.தமிழகத்தில் சொத்து வாங்குவோர், அது தொடர்பான முந்தைய பரிமாற்றங்களை அறிய, வில்லங்க சான்று பெறுவது அவசியம். பொதுமக்கள் நேரடியாக சார் - பதிவாளர் அலுவலகங்களுக்கு சென்றால், தரகர்கள் ஆதிக்கத்தால் சிக்கல்

சென்னை:'ஆன்லைன்' முறையில் வில்லங்க சான்று கோரி விண்ணப்பிப்போரிடம், சார் - பதிவக பணியாளர்கள், கமிஷன் கேட்டு மறைமுகமாக நிர்ப்பந்தம் செய்வதாக புகார் எழுந்து உள்ளது.

தமிழகத்தில் சொத்து வாங்குவோர், அது தொடர்பான முந்தைய பரிமாற்றங்களை அறிய, வில்லங்க சான்று பெறுவது அவசியம். பொதுமக்கள் நேரடியாக சார் - பதிவாளர் அலுவலகங்களுக்கு சென்றால், தரகர்கள் ஆதிக்கத்தால் சிக்கல் ஏற்பட்டது.இதையடுத்து, பொதுமக்கள் ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்தி, விண்ணப்பிக்கும் நடைமுறையை பதிவுத்துறை அறிமுகம் செய்தது.

பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே விண்ணப்பித்தால், மூன்று நாட்களில், அவர்களின் 'இ - மெயில்' முகவரிக்கு வில்லங்க சான்று அனுப்பப்படும்.சமீபகாலமாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்போருக்கு, வில்லங்க சான்று வருவதில்லை.


கூடுதல் வசூல்



இது குறித்து, பொதுமக்கள் கூறியதாவது:மக்கள் நலனுக்காக பதிவுத்துறை, இது போன்ற புதிய வசதிகளை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், சார் - பதிவாளர் அலுவலக பணியாளர்கள், மக்கள் பெயரில் வரும் வில்லங்க சான்று விண்ணப்பங்களை கிடப்பில் போடுகின்றனர். ஆவண எழுத்தர் வாயிலாக வரும் விண்ணப்பங்களுக்கு மட்டுமே, உடனடியாக வில்லங்க சான்று வழங்கப்படுகிறது. இதில், ஒரு சர்வே எண்ணுக்கான வில்லங்க சான்றுக்கு அரசு நிர்ணயித்த 450 ரூபாயுடன், கூடுதலாக 400 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.


தீர்வு பிறக்கும்

இதில், சார் - பதிவக பணியாளர்களுக்கு 200 ரூபாய் கமிஷனாக செல்கிறது. இவ்வாறு கமிஷன் வராத விண்ணப்பங்களுக்கு, வில்லங்க சான்று வழங்கப்படுவதில்லை. இந்த பிரச்னையில், பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, செயலர் ஜோதி நிர்மலாசாமி, ஐ.ஜி., சிவன் அருள் ஆகியோர் கவனம் செலுத்தினால் தீர்வு பிறக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
05-ஆக-202110:29:07 IST Report Abuse
R.RAMACHANDRAN இணைய வழியில் விண்ணப்பித்தாலும் கட்டணம் செலுத்தினாலும் இந்த நாட்டில் லஞ்சம் கொடுப்பவர்களுக்கே அரசு சேவை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X