பஸ் ஊழியர்களுக்கு பணி ஆளும் கட்சியினர் பாகுபாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் ஊழியர்களுக்கு பணி ஆளும் கட்சியினர் பாகுபாடு

Added : ஆக 04, 2021
Share
சென்னை:அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுனர், நடத்துனர்களுக்கு பணி வழங்குவதில், ஆளுங்கட்சியினர் பாகுபாடு காட்டுவதால் அதிருப்தி நிலவுகிறது.அரசு போக்குவரத்துக் கழகங்களின், கட்டுப்பாட்டு பிரிவில் உள்ளோர் தான், ஓட்டுனர், நடத்துனர்களுக்கு பணிகளை பிரித்து வழங்குவர். தற்போது அந்த பிரிவில், தி.மு.க., தொழிற்சங்கமான தொ.மு.ச.,வினர் தான் அதிகளவில் உள்ளனர்.அவர்கள், கூடுதல் வசூல்

சென்னை:அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுனர், நடத்துனர்களுக்கு பணி வழங்குவதில், ஆளுங்கட்சியினர் பாகுபாடு காட்டுவதால் அதிருப்தி நிலவுகிறது.

அரசு போக்குவரத்துக் கழகங்களின், கட்டுப்பாட்டு பிரிவில் உள்ளோர் தான், ஓட்டுனர், நடத்துனர்களுக்கு பணிகளை பிரித்து வழங்குவர். தற்போது அந்த பிரிவில், தி.மு.க., தொழிற்சங்கமான தொ.மு.ச.,வினர் தான் அதிகளவில் உள்ளனர்.அவர்கள், கூடுதல் வசூல் வரும் வழித்தடங்களில் ஓட்டுனர், நடத்துனர்களை பணியமர்த்துவதற்கு, ஆயிரக்கணக்கான ரூபாய் லஞ்சம் பெறுவதாகவும், தொ.மு.ச.,வில் உறுப்பினராக இல்லாதோருக்கு, பணி வழங்காமல் அலைக்கழிப்பதாகவும், தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

போக்குவரத்து தொழிலாளர்கள் கூறியதாவது:கடந்த ஆட்சியில், போக்குவரத்துக் கழகங்களின் முக்கிய பொறுப்புகளில், அண்ணா தொழிற்சங்கத்தினர் இருந்தனர். அவர்கள் பணி செய்யாமல் சம்பளம் பெற்றதோடு, மற்றவர்களுக்கு பணி வழங்குவதற்கும் லஞ்சம் பெற்றனர். அதை, தி.மு.க., தொழிற்சங்கத்தினர் கடுமையாக எதிர்த்தனர்.தற்போது, ஆட்சி மாறினாலும், பணி கிடைக்காமல் திரும்பிச் செல்லும் ஊழியர்களின் காட்சி மாறவில்லை. இதில், போக்குவரத்து செயலர் தலையிட்டு, தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X