சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

ரூ.25 லட்சம் கல்விக்கடன் பெறலாம்!

Added : ஆக 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மாணவர்கள் கல்விக்கடன் பெறுவது எப்படி; எவ்வளவு தொகை பெற முடியும்; அதை எப்படி திருப்பி செலுத்துவது என்பது பற்றி கூறுகிறார், பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரி தனசேகரன்: கல்விக்கடன் பெற முன்னர், வங்கிக்கு சென்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும். ஆனால் இப்போது அப்படியில்லை. www.vidyalakshmi.co.in என்ற மத்திய அரசின் இணையதளத்தில் உங்கள் பெயர், முகவரி போன்ற தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.அதை
சொல்கிறார்கள்

மாணவர்கள் கல்விக்கடன் பெறுவது எப்படி; எவ்வளவு தொகை பெற முடியும்; அதை எப்படி திருப்பி செலுத்துவது என்பது பற்றி கூறுகிறார், பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரி தனசேகரன்: கல்விக்கடன் பெற முன்னர், வங்கிக்கு சென்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும். ஆனால் இப்போது அப்படியில்லை. www.vidyalakshmi.co.in என்ற மத்திய அரசின் இணையதளத்தில் உங்கள் பெயர், முகவரி போன்ற தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.அதை பரிசீலனை செய்து, உங்கள் ஊருக்கு அருகில் உள்ள வங்கிக் கிளை எது, எந்தெந்த வங்கி களில் சிறப்பு சலுகைகள் உள்ளன என்பதை ஆராய்ந்து, மாணவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.கல்விக்கடன் பெற விரும்புவோர் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள மூன்று வங்கிகள், கடன் பெறுவோருக்கு பரிந்துரை செய்யப்படும்.
இப்படி, வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள வங்கிக் கிளைகளில் கடன் பெற விண்ணப்பிக்கும் போது தான், வங்கி அதிகாரிகள் எளிதாக வந்து உங்களை விசாரிக்க முடியும்; கடன் வழங்கும் முறை எளிதாக இருக்கும்.வித்யலட்சுமி இணையதளம் உங்களுக்கு பரிந்துரைத்துள்ள வங்கிக் கிளைக்கு நேரடியாக சென்று, மேலாளரை சந்தித்து, உங்களுக்கு எவ்வளவு கடன் வேண்டும்; என்ன படிக்க உள்ளீர்கள்; எப்படி திருப்பி செலுத்துவீர்கள் என்பன போன்ற விபரங்களை தெரிவிக்க வேண்டும்.உங்கள் பேச்சும், உங்கள் கல்வித்திட்டமும் வங்கி மேலாளரை ஈர்க்க வேண்டும். பெரும்பாலான கல்விக் கடன்கள், அடமானம் இல்லாமல் தான் வழங்கப்படுகின்றன. அதனால், உங்கள் மீது மேலாளருக்கு நல்ல எண்ணம் இருந்தால் தான், கடன் எளிதாக கிடைக்கும்.கல்விக்கடனாக 4 லட்சம் ரூபாய் வரை எந்த அடமானம், பிணை, உறுதிமொழி அளிப்பவர் கையொப்பமும் இல்லாமல் கிடைக்கும்.

பிரபல முன்னணி கல்வி நிறுவனங்களில் படிப்பவர்களுக்கு 7.5 லட்சம் ரூபாய் வரை அடமானம் இல்லாமல் வழங்கப்படுகிறது.வாங்கும் கடன் 7.5 லட்சம் ரூபாய்க்கு மேலாகும் போது தான், 'பிக்சட் டிபாசிட்', வீடு, மனை போன்ற சொத்துக்களை உத்தரவாத மாக கொடுக்க வேண்டியிருக்கும். அந்த வகையில் 25 லட்சம் ரூபாய் வரை கடனாக பெற முடியும்.வெளிநாட்டில் படிப்பதற்கும் அதிக பட்சம் 25 லட்சம் ரூபாய் வரை கல்விக்கடன் வழங்கப்படுகிறது. கல்விக் கடனுக்கான வட்டி 6.75 - 17 சதவீதம் வரை உள்ளது.படித்து முடித்து ஓராண்டுக்கு பின் திருப்பி செலுத்த வேண்டும்.படித்து முடித்ததுமே வேலை கிடைத்து விட்டால், முதல் மாதத்திலிருந்தே கடனை திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும். ஓர் ஆண்டு வரை வேலை கிடைக்கவில்லை என்றால், வங்கி மேலாளரை அணுகி, அவகாசம் கேட்க வேண்டும்!

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
05-ஆக-202115:03:29 IST Report Abuse
r.sundaram திருப்பி செலுத்த வேண்டியிருக்கும், என்பது தேவையா? திருப்பி செலுத்த வேண்டும் என்று சொல்ல வேண்டாமா? ஒரு வங்கியாளரான நீங்களே இதில் தப்பு செய்யலாமா? இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X