சம்பவம் செய்தி

தமிழ்நாடு

96 மருத்துவமனைகள் மீது நடவடிக்கை

Added : ஆக 04, 2021
Share
Advertisement
சென்னை:''தமிழகத்தில், கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த, 96 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.சென்னை, நுங்கம்பாக்கத்தில் ஒரு தனியார் மருத்துவமனையை நேற்று திறந்து வைத்து, அவர் அளித்த பேட்டி:சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்பவர்கள்

சென்னை:''தமிழகத்தில், கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த, 96 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

சென்னை, நுங்கம்பாக்கத்தில் ஒரு தனியார் மருத்துவமனையை நேற்று திறந்து வைத்து, அவர் அளித்த பேட்டி:சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், துாத்துக்குடி போன்ற ஒருசில மாவட்டங்களில், மக்கள் ஆர்வம் காட்டவில்லை.

தற்போதைய சூழலில், 9.94 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. கொரோனா தொற்று சில மாவட்டங்களில் அதிகரிக்க துவங்கியுள்ளது. தொற்று அதிகமுள்ள இடங்களை கண்டறிந்து, தேவையான கட்டுப்பாடுகளை விதித்து கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாத, முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த, 96 தனியார் மருத்துவ மனைகள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இக்கட்டான காலகட்டத்தில், தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும். அதிக கட்டணம் கேட்கும் மருத்துவமனைகள் குறித்து, பொது மக்கள் புகார் அளிக்க வேண்டும். அப்போது தான், உரிய நடவடிக்கை எடுக்க முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X