பொது செய்தி

இந்தியா

தென் சீனக் கடலில் போர் கப்பல்கள் நிறுத்தம் : இந்தியா அதிரடி

Updated : ஆக 06, 2021 | Added : ஆக 04, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி :தென் சீனக் கடல் பகுதி முழுதையும் சொந்தம் கொண்டாடி, சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், சீனாவின் அண்டை நாடுகளுடனான ராணுவ உறவை வலுப்படுத்தும் நோக்கிலும், தென் சீனக் கடல் பகுதிக்கு நான்கு போர் கப்பல்களை இந்தியா அனுப்பியுள்ளது.தென் சீனக் கடல் முழுதும் எரிவாயு, எண்ணெய் உட்பட பல இயற்கை வளங்கள் கொட்டி கிடக்கின்றன. இக்கடல்,
 சீனாவின் ஆதிக்கம், இந்தியா அதிரடி, தென் சீனக் கடல் கப்பல்கள்

புதுடில்லி :தென் சீனக் கடல் பகுதி முழுதையும் சொந்தம் கொண்டாடி, சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், சீனாவின் அண்டை நாடுகளுடனான ராணுவ உறவை வலுப்படுத்தும் நோக்கிலும், தென் சீனக் கடல் பகுதிக்கு நான்கு போர் கப்பல்களை இந்தியா அனுப்பியுள்ளது.

தென் சீனக் கடல் முழுதும் எரிவாயு, எண்ணெய் உட்பட பல இயற்கை வளங்கள் கொட்டி கிடக்கின்றன. இக்கடல், உலகின் முக்கியமான கடல் போக்குவரத்து தடங்களில் ஒன்றாக உள்ளது.உலகின் மூன்றில் ஒரு பங்கு கப்பல் போக்குவரத்து, தென் சீனக் கடல் வழியாகவே நடக்கிறது. அதனால், தென் சீனக் கடல் பகுதியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர சீனா துடிக்கிறது.
ஆக்கிரமிப்புகொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையிலும், தென் சீனக் கடலை ஆக்கிரமிக்கும் தன் நடவடிக்கைகளை, சீனா சிறிதும் குறைத்துக் கொள்ளவில்லை. கடந்த ஜனவரி முதல், சீனாவின் கடலோர காவல்படை கப்பல்கள், தென் சீனக் கடல் பகுதியின் சர்ச்சைக்குரிய பகுதியில் வலம் வரத் துவங்கின. அப்பகுதியில் மீன்பிடிப்பவர்களை துன்புறுத்தி விரட்டியடித்தன. இந்நிலையில், தென் சீனக் கடல் பகுதியை சீனா ஆக்கிரமித்து வருவதை அதன் அண்டை நாடுகள் விரும்பவில்லை. மலேஷியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், தைவான் என, பல நாடுகள் தென் சீனக் கடல் மீது சொந்தம் கொண்டாடுகின்றன.தென் சீனக் கடலை, சீனா ராணுவமயமாக்கி வருவதை அமெரிக்காவும் விரும்பவில்லை. தன் நட்பு நாடுகளின் பாதுகாப்புக்கும், பொருளாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படும் என, அமெரிக்கா கருதுகிறது.

இதையடுத்து, தென்கொரியா, தைவான் ஆகிய நாடுகளின் கப்பல் படையுடன் இணைந்து அமெரிக்க கடற்படை, இந்தப் பகுதியில் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.இதற்கிடையே, லடாக் எல்லையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சீன ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலையடுத்து, இந்திய - சீன உறவு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தென் சீனக் கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கும் நோக்கிலும், நட்பு நாடுகளுடனான ராணுவ உறவை வலுப்படுத்தும் நோக்கிலும், தென் சீனக் கடல் பகுதிக்கு இந்தியாவும் நான்கு போர் கப்பல்களை அனுப்பியுள்ளது.
அதிருப்திஇது பற்றி இந்திய கடற்படை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:தென் சீனக் கடல் பகுதிக்கு இந்திய கடற்படையின் நான்கு போர் கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதில் ஏவுகணைகளை அழிக்கும் போர் கப்பலும், ஏவுகணைகளை தாங்கிச் செல்லும் போர் கப்பலும் இடம் பெற்றுள்ளன. தென் சீனக் கடல் பகுதி யில் அமைந்துள்ள நட்பு நாடுகளுடனான ராணுவ உறவை வலுப்படுத்தும் நோக்கில் தான் போர் கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளன.இவை அங்கு அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் கூட்டு பயிற்சியில் ஈடுபடும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு சீனா அதிருப்தி தெரிவித்துள்ள தாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


இந்திய மாணவர் கொலைபீஹார் மாநிலம் கயாவை சேர்ந்தவர் அமன் நாக்சென். இவர், சீனாவில் உள்ள டியான்ஜின் வெளிநாட்டு ஆய்வு பல்கலையில் வணிக மேலாண்மை படிப்பு படித்து வந்தார். கடந்த 29ம் தேதி, பல்கலை வளாகத்தில் நாக்சென் இறந்து கிடந்தார். இது பற்றி, சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஜூலை 29ம் தேதி இரவு 8.00 மணியளவில் டியான்ஜின் பல்கலை வளாகத்தில் இந்திய மாணவர் நாக்சென் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இது தொடர்பாக, அதே பல்கலையில் படிக்கும் மற்றொரு வெளிநாட்டு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. ஆனால், நாக்சென்னை கொலை செய்தவர் எந்த நாட்டை சேர்ந்தவர், நாக்சென்னை எதற்காக கொலை செய்தார் என்ற விபரம் தெரியவில்லை. நாக்சென்னின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக டியான்ஜினுக்கு இந்திய துாதரக அதிகாரி சென்றுள்ளார். இன்னும் இரண்டு நாட்களில் நாக்சென்னின் உடல் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் மிக உயரமான சாலையூனியன் பிரதேசமான லடாக்கின் கிழக்கில், கடல் மட்டத்திலிருந்து 19 ஆயிரத்து 300 அடி உயரத்தில், எல்லை சாலைகள் அமைப்பு நிறுவனம் சாலை அமைத்துள்ளது. உம்லிங்கா கணவாய் பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த சாலை தான், உலகிலேயே மிக உயரமான சாலையாக கருதப்படுகிறது.
இதற்கு முன், தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் 18 ஆயிரத்து 953 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள சாலை தான், உலகின் மிக உயரமான சாலையாக இருந்தது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
05-ஆக-202122:17:28 IST Report Abuse
அசோக்ராஜ் லோக்கல் உண்டி குலுக்கி தூங்க மாட்டானே? மார்க்கு, லெனின், எங்கல், சே ன்னு உளறிக்கிட்டே இருப்பானே? வேற வழியில்லை. நாலு பேர் படமும் இருக்கற டீசர்ட் மாட்டிக்கிட்டு தூங்கிட வேண்டியதுதான். லால் சலாம். குட்டு நைட்டு.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
05-ஆக-202114:32:46 IST Report Abuse
r.sundaram மனவலிமை இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இத்தனை காலம் அது இல்லாததாலேயே நாம் தாழ்ந்து இருந்தோம். இன்று மனவலிமை இருப்பதால் உயர்ந்து நிற்கின்றோம்
Rate this:
Cancel
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
05-ஆக-202113:22:13 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் அமெரிக்காவிடம் இருந்து ஹார்பூண் ஏவுகணைகளை வாங்க உள்ளது இதை உத்தேசித்துதான் என்று புரிகிறது நில எல்லையில் அவர்களுடன் சமாதானம் பேசிவிட்டு, கடற்பரப்பில் எதிர்ப்பது (தவறில்லையென்றாலும்) வித்தியாசமாக இருக்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X