இந்தியா கட்டிய அணையை குறி வைத்த தலிபான்கள்: முறியடித்த ஆப்கன் படை

Updated : ஆக 04, 2021 | Added : ஆக 04, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
காபூல்: ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் இந்தியாவால் கட்டித்தரப்பட்ட சல்மா அணை மீது தலிபான்கள் நடத்தயிருந்த தாக்குதலை ஆப்கன் படைகள் முறியடித்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்தது. இந்தியா - ஆப்கானிஸ்தான் நட்புறவை பறைசாற்றும் விதமாக சல்மா அணை கட்டப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு முன் இந்த அணையை பிரதமர் மோடியும், ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனியும் கூட்டாக திறந்து வைத்தனர்.

காபூல்: ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் இந்தியாவால் கட்டித்தரப்பட்ட சல்மா அணை மீது தலிபான்கள் நடத்தயிருந்த தாக்குதலை ஆப்கன் படைகள் முறியடித்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்தது.



latest tamil news



இந்தியா - ஆப்கானிஸ்தான் நட்புறவை பறைசாற்றும் விதமாக சல்மா அணை கட்டப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு முன் இந்த அணையை பிரதமர் மோடியும், ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனியும் கூட்டாக திறந்து வைத்தனர். ஆப்கனில் இருக்கக்கூடிய பெரிய அணைகளில் இதுவும் ஒன்று. செஷ்தே ஷெரீப் மாவட்டத்தில் இருக்கும் இந்த அணையால் 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன. ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு மின்சார வசதி கிடைத்துள்ளது. இதற்காக இந்தியா மிக அதிகம் செலவிட்டுள்ளது.

ஆப்கனில் அமெரிக்க படை மற்றும் நேட்டோ படைகளின் விலக்கலால் கடந்த 2 மாதங்களில் தலிபான்கள் கை ஓங்கியுள்ளது. 223 மாவட்டங்களை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். கடந்த சில வாரங்களில் மட்டும் பல்வேறு மாவட்டங்களை கைப்பற்றியுள்ளனர். 34 மாகாண தலைநகரங்களில் 17 நகரங்கள் நேரடியாக அவர்களின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. சல்மா அணையையும் தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


latest tamil news



இது பற்றி அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஃபவாத் அமன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: தலிபான் பயங்கரவாதிகள் நேற்றிரவு சல்மா அணை மீது தாக்குதல் நடத்தி அழிக்க முயன்றனர். அவர்களது முயற்சி தோல்வியுற்றது. அதிர்ஷ்டவசமாக ஆப்கன் தேசிய படையினரின் பதில் தாக்குதலால் அவர்கள் பலத்த சேதத்தை சந்தித்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். என கூறியுள்ளார். கடந்த மாதமும் சல்மா அணை தலிபான்களின் ராக்கெட்டுகள் மற்றும் பீரங்கி குண்டுகளால் குறிவைக்கப்பட்டது. ஆனால் அவை அணைக்கு அருகிலேயே வெடித்து சிதறியதால் சேதம் ஏற்படவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா
05-ஆக-202110:16:40 IST Report Abuse
JAYACHANDRAN RAMAKRISHNAN தீவிர வாதம் எவ்வளவு முட்டாள் தனமானது. தன் நாட்டு மக்களை அழித்து தன் நாட்டை ஆள நினைக்கும் முட்டாள்கள். அனைவரையும் அழித்து விட்டு யாருக்குகாக ஆட்சி செய்ய போகிறார்கள்.
Rate this:
Cancel
s.மாடசாமி, சிலுக்குவார்பட்டு 2 லட்சம் பாசன வசதி கொண்ட அணையை அழிக்க நினைப்பவர்கள் மனித ஜென்மமாக இருக்க இயலாது. இதிலிருந்தே தாலிபான்கள் எவ்வளவு கொடூரமானவர்கள் என புரிந்து கொள்ளலாம்
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
05-ஆக-202108:22:50 IST Report Abuse
 N.Purushothaman எப்படிப்பட்ட கொடூர மனம் கொண்டவனுங்களா இருப்பானுங்க இந்த தாலிபான்கள் .....மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கத்துடிக்கும் இந்த சக்திகளா நல்லாட்சி கொடுக்க போறானுங்க ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X