பொது செய்தி

தமிழ்நாடு

மது 'சில்லிங்' விற்பனை கண்டுகொள்ளாத போலீஸ்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு சுற்றுப்பகுதி கிராமங்களில், புகையிலை பொருள்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், மாலை, 5:00 மணிக்கு மேல், டாஸ்மாக் கடை உள்பட மளிகை என அனைத்து கடைகளும் அடைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.ஆனால், கிணத்துக்கடவு - சொலவம்பாளையம் ரோட்டில் செயல்படும் டாஸ்மாக் கடை அருகிலேயே, புதருக்குள் மறைத்து மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு சுற்றுப்பகுதி கிராமங்களில், புகையிலை பொருள்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், மாலை, 5:00 மணிக்கு மேல், டாஸ்மாக் கடை உள்பட மளிகை என அனைத்து கடைகளும் அடைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.ஆனால், கிணத்துக்கடவு - சொலவம்பாளையம் ரோட்டில் செயல்படும் டாஸ்மாக் கடை அருகிலேயே, புதருக்குள் மறைத்து மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது தொடர்கிறது. இப்பகுதியில் போலீஸ் கண்காணிப்பு இல்லை.டாஸ்மாக் கடைகளை கண்காணிப்பதோடு, சில்லிங் விற்பனையை தடுக்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தன்னார்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X