பொது செய்தி

தமிழ்நாடு

வேலை உறுதி திட்டத்தில் முறைகேடு கலெக்டர் விசாரணைக்கு வலியுறுத்தல்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
ஆனைமலை : ஆனைமலை, சோமந்துரைசித்துாரில், பா.ஜ., கிழக்கு ஒன்றியம் சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது. ஆனைமலை, சோமந்துரைசித்துாரில், பா.ஜ., கிழக்கு ஒன்றியம் சார்பில், 'இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம்' என்ற தலைப்பில், ஆலோசனைக்கூட்டம் நடந்தது.இதில், மண்டல தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார், மாநில விவசாய அணி துணைத்தலைவர் ரமேஷ் மற்றும் மாவட்ட செயலாளர் மோகன் தலைமை

ஆனைமலை : ஆனைமலை, சோமந்துரைசித்துாரில், பா.ஜ., கிழக்கு ஒன்றியம் சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது.

ஆனைமலை, சோமந்துரைசித்துாரில், பா.ஜ., கிழக்கு ஒன்றியம் சார்பில், 'இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம்' என்ற தலைப்பில், ஆலோசனைக்கூட்டம் நடந்தது.இதில், மண்டல தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார், மாநில விவசாய அணி துணைத்தலைவர் ரமேஷ் மற்றும் மாவட்ட செயலாளர் மோகன் தலைமை வகித்தனர். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் அதிக அளவில் முறைகேடுகள் நடக்கிறது. இது குறித்து, கோவை மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்த வேண்டும்.

பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் முறையாக பயனாளர்களை தேர்வு செய்து, வீடுகள் ஒதுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.கொரோனா தடுப்பூசி வழங்குவதில், ஆளும்கட்சியினரின் தலையீடு அதிகமாக உள்ளதால், பலருக்கும் தடுப்பூசி கிடைக்காத நிலை ஏற்படுகிறது. அனைவருக்கும் தடுப்பூசி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், பா.ஜ., கட்சியின் வெற்றிப்பயணம், மத்திய அரசின் சிறப்பான ஆட்சி குறித்து மக்களிடம் தெரிவித்து, கட்சியில் சேர்த்து உள்ளாட்சித்தேர்தலில் வெற்றி பெற முயற்சிக்க வேண்டும்.இவையுள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X