கிராமத்துக்கு ஒரு வேளாண் அலுவலர்; விவசாயிகள் கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிராமத்துக்கு ஒரு வேளாண் அலுவலர்; விவசாயிகள் கோரிக்கை

Added : ஆக 04, 2021
Share
கருமத்தம்பட்டி : கிராமம்தோறும் ஒரு வேளாண் அலுவலரை நியமித்து, விவசாயிகளின் அலைச்சலைத் தவிர்க்க வேண்டும், என, கோரிக்கை எழுந்துள்ளது. கவுசிகா நதி மேம்பாட்டு சங்க தலைவர் செல்வராஜ், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர் செல்வத்துக்கு அனுப்பியுள்ள மனு:வேளாண்மை, தோட்டக்கலைத் துறை, வணிகம் மற்றும் விற்பனை, அங்கக மற்றும் விதை சான்றளிப்பு, பட்டு வளர்ச்சித் துறை,

கருமத்தம்பட்டி : கிராமம்தோறும் ஒரு வேளாண் அலுவலரை நியமித்து, விவசாயிகளின் அலைச்சலைத் தவிர்க்க வேண்டும், என, கோரிக்கை எழுந்துள்ளது.

கவுசிகா நதி மேம்பாட்டு சங்க தலைவர் செல்வராஜ், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர் செல்வத்துக்கு அனுப்பியுள்ள மனு:வேளாண்மை, தோட்டக்கலைத் துறை, வணிகம் மற்றும் விற்பனை, அங்கக மற்றும் விதை சான்றளிப்பு, பட்டு வளர்ச்சித் துறை, வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட துறைகளை ஒருங்கிணைக்க வேண்டும்.அனைத்து துறைகளின் வாயிலாக செயல்படுத்தப்படும் திட்டங்கள், ஆலோசனைகள், ஒவ்வொரு திட்டத்துக்கும் அரசு வழங்கும் மானிய விபரம், திட்டங்களில் சேர தேவையான ஆவணங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை விவசாயிகளுக்கு வழங்க, ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு வேளாண் அலுவலர் என்ற முறையில் புதிய பணியிடத்தை உருவாக்கி, அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

அவர்கள் மூலம் அனைத்து விபரங்களும், விவசாயிகளுக்கு உடனடியாக கிடைக்கும்படி செய்ய வேண்டும். இதனால், விவசாயிகளின் அலைச்சல் பெருமளவில் குறையும்.விவசாயிகளுக்கு தரமான உரங்கள், பூச்சி மருந்துகள் கிடைக்கும் வகையில், வட்டார அளவில், உரக்கடைகளை அரசே திறக்க வேண்டும்.விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களை, அவர்களே விற்கும் வகையில், அந்தந்த பகுதிகளில் விவசாயிகள் விற்பனையகம் திறக்கப்பட வேண்டும்.ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை, அனைத்து விவசாய பணிகளுக்கும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர்க் காப்பீடு திட்டத்தில், பயிர்களின் சேதத்தை, கிராம அளவில் கணக்கீடு செய்யும் முறையை அமலாக்க வேண்டும்இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X