பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர்களுக்கு கலெக்டர் அறிவுரை

Added : ஆக 04, 2021
Share
Advertisement
உடுமலை : தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் கலெக்டர் அறிக்கை:ஆசிரியர்கள், உயர்தர வகையில் கற்பித்தல் ஏற்படுத்தி, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்.அனைத்துப்பள்ளிகளிலும் வளாகம், வகுப்பறை, குடிநீர் தொட்டிகள், கழிப்பறை ஆகியவற்றை கிருமிநாசினி

உடுமலை : தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் கலெக்டர் அறிக்கை:ஆசிரியர்கள், உயர்தர வகையில் கற்பித்தல் ஏற்படுத்தி, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்.அனைத்துப்பள்ளிகளிலும் வளாகம், வகுப்பறை, குடிநீர் தொட்டிகள், கழிப்பறை ஆகியவற்றை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி, துாய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும்.மாணவர்கள் குடிப்பதற்கு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மதிய உணவு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளியின் தளவாடப்பொருட்களை சரிசெய்து மேம்படுத்த வேண்டும். சேர்க்கை முடியும் வரை, வாரம்தோறும் புதன்கிழமை, பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களை அழைத்து, பஞ்சாயத்து அட்மிஷன் விழா நடத்த வேண்டும்.மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில், துறை ரீதியான அலுவலர்களை ஒன்றிணைத்து, பள்ளியில் உள்ள வசதிகள், இலவச நலத்திட்டங்கள், கல்வி உதவித்தொகை ஆகியவை குறித்து துண்டு பிரசுரம், ஒலிப்பெருக்கி மற்றும் சுவரொட்டி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.மேலும், அந்தந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், வீடு வீடாகச்சென்று மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு, ஆதரவு திரட்ட வேண்டும்.மாணவர்களுக்கு, கல்வித் தொலைக்காட்சி வாயிலாக நடத்தப்படும் பாடங்களை கற்பிக்கச் செய்வதுடன், அவை சார்ந்த பதிவேடுகளை, ஆசிரியர்கள், முறையாக பராமரிக்க வேண்டும். குறிப்பாக, பள்ளி உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், பழுது பார்க்கவும் உதவி கோரலாம்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X