பொது செய்தி

தமிழ்நாடு

தீரன் சின்னமலை நினைவுநாள் அனுசரிப்பு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி, : பொள்ளாச்சியில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்தப்பட்டது. சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, பொள்ளாச்சி நகர தி.மு.க., அலுவலகத்தில் நடந்தது. நகர பொறுப்பாளர் பழனிசாமி தலைமை வகித்தார். நகர துணை செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட பிரதிநிதிகள் தர்மலிங்கம், கண்ணன் முன்னிலை

பொள்ளாச்சி, : பொள்ளாச்சியில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்தப்பட்டது.

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, பொள்ளாச்சி நகர தி.மு.க., அலுவலகத்தில் நடந்தது. நகர பொறுப்பாளர் பழனிசாமி தலைமை வகித்தார். நகர துணை செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட பிரதிநிதிகள் தர்மலிங்கம், கண்ணன் முன்னிலை வகித்தனர்.மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன், தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினார். மாவட்ட, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.புது பஸ் ஸ்டாண்ட் அருகே, கொ.ம.தே.க., சார்பில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாவட்ட செயலாளர் நித்தியானந்தம் தலைமையில், நிர்வாகிகள், தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு மலர்துாவி அஞ்சலி செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X