சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முத்திரை வைக்காவிட்டால் பறிமுதல் இறைச்சிக் கடைகளுக்கு எச்சரிக்கை

Added : ஆக 04, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம் : முத்திரை வைக்காத ஆட்டு இறைச்சியை விற்பனை செய்தால், இறைச்சி பறிமுதல் செய்யப்படுவதுடன், கடும் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும், என, மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனராக, வினோத் பொறுப்பேற்றுள்ளார். இவர், மணிநகர், சாந்தி நகர், காட்டூர், ஓடந்துறை, எஸ்.எம்.நகர், சிறுமுகை ரோடு ஆகிய

மேட்டுப்பாளையம் : முத்திரை வைக்காத ஆட்டு இறைச்சியை விற்பனை செய்தால், இறைச்சி பறிமுதல் செய்யப்படுவதுடன், கடும் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும், என, மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனராக, வினோத் பொறுப்பேற்றுள்ளார். இவர், மணிநகர், சாந்தி நகர், காட்டூர், ஓடந்துறை, எஸ்.எம்.நகர், சிறுமுகை ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள, குடியிருப்பு பகுதிகளை ஆய்வு செய்தார். இப்பகுதிகளில் சாக்கடைகளில் கழிவுகள் தேங்கி இருப்பதையும், தெருவில் குப்பை குவிந்து கிடப்பதையும் கண்டு, உடனடியாக, அவற்றை அகற்ற உத்தரவிட்டார்.மேலும், அப்பகுதி மக்களின் குறைகளைக் கேட்டார். வெள்ளிப்பாளையம் சாலையில் உள்ள, நகராட்சி ஆடு வதைக்கூடத்தைப் பார்வையிட்டார்.

அங்கு, அறுக்கப்படும் ஆடுகள், ஆரோக்கியமானவையா, நோய்வாய்ப்பட்டவையா, இறைச்சி மீது முத்திரை வைக்கப்படுகிறதா, என்ற விபரங்களைக் கேட்டறிந்தார். இறைச்சிக் கடை உரிமையாளர்கள் அனைவரும், ஆடு வதைக் கூடத்தில் மட்டுமே, ஆடுகளை அறுத்து, இறைச்சி மீது முத்திரை வைத்து, எடுத்துச் செல்ல வேண்டும்.யாரேனும் முத்திரை வைக்காத இறைச்சியை விற்பனை செய்தால், இறைச்சி பறிமுதல் செய்யப்படும். கடையின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும், என, எச்சரிக்கை செய்தார்.ஆய்வின்போது நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார், ஆரோக்கியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X