பண மோசடி வழக்கில் கவுதம் தாப்பர் கைது

Added : ஆக 04, 2021
Share
Advertisement
புதுடில்லி:டில்லியின் அவந்தா குழும நிறுவன அதிகாரி கவுதம் தாப்பர் பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.டில்லி மற்றும் மும்பையில் செயல்படும் அவந்தா குழும நிறுவனங்கள் 'யெஸ்' வங்கியில் 1 900 கோடி ரூபாய் கடன் வாங்கின. இந்த கடன்களில் சலுகை தளர்வு மற்றும் தள்ளுபடியுடன் மேலும் பல கடன்களை யெஸ் வங்கி வழங்கியது.இதற்காக அந்நிறுவனத்திற்கு சொந்தமாக
 பண மோசடி வழக்கில் கவுதம் தாப்பர் கைது

புதுடில்லி:டில்லியின் அவந்தா குழும நிறுவன அதிகாரி கவுதம் தாப்பர் பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

டில்லி மற்றும் மும்பையில் செயல்படும் அவந்தா குழும நிறுவனங்கள் 'யெஸ்' வங்கியில் 1 900 கோடி ரூபாய் கடன் வாங்கின. இந்த கடன்களில் சலுகை தளர்வு மற்றும் தள்ளுபடியுடன் மேலும் பல கடன்களை யெஸ் வங்கி வழங்கியது.இதற்காக அந்நிறுவனத்திற்கு சொந்தமாக டில்லியில் இருந்த ஒரு சொத்தை சந்தை மதிப்பை விட குறைந்த விலைக்கு யெஸ் வங்கியின் நிர்வாக இயக்குனர் ராணா கபூர் வாங்கியதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக ராணா கபூர் அவரது மனைவி பிந்து மற்றும் அவந்தா குழும நிறுவன நிர்வாகி கவுதம் தாப்பர் 60 ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.இந்த சம்பவத்தில் நடைபெற்ற பண மோசடி தொடர்பாக அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். டில்லி மற்றும் மும்பையில் கவுதம் தாப்பருடன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனைகளை நடத்தினர்.முடிவில் நேற்று முன்தினம் இரவு கவுதம் தாப்பர் கைது செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X