பொது செய்தி

இந்தியா

ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பல் சோதனை ஓட்டம் வெற்றி

Added : ஆக 04, 2021
Share
Advertisement
புதுடில்லி:உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் அதிநவீன விமானம் தாங்கி போர் கப்பலான 'ஐ.என்.எஸ். விக்ராந்த்'தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. நம் கடற்படையின் முதல் விமானம் தாங்கி போர் கப்பல் 1961ல் ஐரோப்பிய நாடான பிரிட்டன் அரசிடம் இருந்து வாங்கப்பட்டது. ஐ.என்.எஸ். விக்ராந்த் என பெயரிடப்பட்ட இந்த போர் கப்பல் 1971ல் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போரில் முக்கிய
 ஐ.என்.எஸ்.  விக்ராந்த் கப்பல் சோதனை ஓட்டம் வெற்றி

புதுடில்லி:உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் அதிநவீன விமானம் தாங்கி போர் கப்பலான 'ஐ.என்.எஸ். விக்ராந்த்'தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

நம் கடற்படையின் முதல் விமானம் தாங்கி போர் கப்பல் 1961ல் ஐரோப்பிய நாடான பிரிட்டன் அரசிடம் இருந்து வாங்கப்பட்டது. ஐ.என்.எஸ். விக்ராந்த் என பெயரிடப்பட்ட இந்த போர் கப்பல் 1971ல் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போரில் முக்கிய பங்காற்றியது. பின் 1997ல் படையில் இருந்து விலக்கப்பட்டு 2017ல் பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட்டது.

இதையடுத்து ரஷ்யாவிடமிருந்து 17 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா விமானம் தாங்கி போர் கப்பல் 2013ல் வாங்கப்பட்டது. நம் கடற்படையில் உள்ள ஒரே விமானம் தாங்கி போர் கப்பலாக இது உள்ளது. இந்நிலையில் நம் கடற்படை முதல் முறை யாக உள்நாட்டிலேயே விமானம் தாங்கி போர் கப்பலை உருவாக்கி உள்ளது.

மொத்தம் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கப்பலுக்கு முதல் போர் கப்பலின் நினைவாக ஐ.என்.எஸ். விக்ராந்த் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.மொத்தம் 860 அடி நீளம் 203 அடி அகலம் உடைய இந்த கப்பல் 40 ஆயிரம் டன் எடையுடன் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. 'பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பின் அடுத்த ஆண்டு ஆகஸ்ட்டில் இந்த போர் கப்பல் படையில் இணைக்கப்படும்' என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து கடற்படை செய்தி தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:இது வரலாற்று சிறப்பு மிக்க நாள். முதல் முறையாக இவ்வளவு பிரமாண்ட அதிநவீன விமானம் தாங்கி போர் கப்பலை நம் கடற்படை உருவாக்கி இருக்கிறது. தற்சார்பு இந்தியா மற்றும் 'மேக் இன் இந்தியா' முயற்சிகளுக்கு பெருமை சேர்ப்பதாக இது அமைந்துள்ளது.இதன் வாயிலாக அதிநவீன விமானம் தாங்கி போர் கப்பலை உள்நாட்டிலேயே வடிவமைக்கவும் உருவாக்கவும் திறன் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X