பொது செய்தி

தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் ஒன்றிய அதிகாரிகள் பரபரப்பு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு, ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றியக்குழு தலைவர்கள், 2020 ஜனவரியில் பதவியேற்றனர். இந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி காலியாக உள்ளன. இடைத்தேர்தல் நடத்தி அந்த பதவிக்கு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக,

பொள்ளாச்சி : தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு, ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றியக்குழு தலைவர்கள், 2020 ஜனவரியில் பதவியேற்றனர்.

இந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி காலியாக உள்ளன. இடைத்தேர்தல் நடத்தி அந்த பதவிக்கு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக, தள்ளிப் போன இடைத்தேர்தல், இம்மாத இறுதி அல்லது வரும் செப்., முதல் வாரத்தில் நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இதில், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் தென்குமாரபாளையம் ஊராட்சி தலைவர், ஆனைமலை ஒன்றியத்தில் திவான்சாபுதுார் ஊராட்சி தலைவர், வடக்கு ஒன்றியத்தில் போளியகவுண்டன்பாளையம், ஜமீன்முத்துாரில் தலா ஒரு வார்டு உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன.இடைத்தேர்தல் நடத்த, தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிப்பது மற்றும் பிற இடைத்தேர்தல் ஏற்பாடுகளில் ஒன்றிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X