பொது செய்தி

தமிழ்நாடு

தேயிலை எஸ்டேட்டை சூழ்ந்த மழை வெள்ளம்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
வால்பாறை : சோலையாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள, தேயிலை எஸ்டேட்களை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வால்பாறையில் இந்தாண்டு ஜூலை மாதம் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்த நிலையில், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் முழு கொள்ளளவும், கடந்த, 23ம் தேதி நிரம்பியது. இதனை தொடர்ந்து, சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.இந்நிலையில்,

வால்பாறை : சோலையாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள, தேயிலை எஸ்டேட்களை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

வால்பாறையில் இந்தாண்டு ஜூலை மாதம் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்த நிலையில், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் முழு கொள்ளளவும், கடந்த, 23ம் தேதி நிரம்பியது. இதனை தொடர்ந்து, சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.இந்நிலையில், சோலையாறுஅணை நீர்பிடிப்பு பகுதிகளை ஒட்டியுள்ள, பல்வேறு எஸ்டேட்கள் தேயிலை பயிரிடப்பட்டுள்ளனர். இதனால் மழையின் போது அணை நிரம்பியதும், தேயிலை செடிகளை அணை நீர் சூழ்ந்து, தொழிலாளர்கள் தேயிலை பறிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று காலை நிலவரப்படி, சோலையாறு அணையில், 161.06 அடி நீர்மட்டம் இருந்தது. பரம்பிக்குளம் அணையின், 72 அடி உயரத்தில், 61.90 அடி நீர்மட்டம் இருந்தது. பரம்பிக்குளத்தில் இன்னும், 10 அடி நீர்மட்டம் உயர்ந்தால், அணை நிரம்பி விடும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X